பிரித்தானியாவில் இளைஞருக்கு நேர்ந்த கதி: பேஸ்புக்கில் நன்றி சொன்னார்

Report Print Santhan in பிரித்தானியா
524Shares
524Shares
lankasrimarket.com

பிரித்தானியாவில் தலைப்பாகை அணிந்த காரணத்திற்காக இரவு விடுதியிலிருந்து சீக்கிய இளைஞர் வெளியே தள்ளப்பட்ட சம்பவம் வைரலாக பரவியதால், அதற்கு சமூகவலைத்தளங்களில் ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் அந்த இளைஞர் நன்றி தெரிவித்துள்ளார்.

பிரித்தானியாவின் நாட்டிங்காம் டிரன்ட் பல்கலையில் 4-ஆம் ஆண்டு சட்டப்படிப்பு படிப்பு படித்து வருபவர் அம்ரிக் சிங்(22).

இவர் சமீபத்தில் நாட்டின் நாட்டிங்ஹம்ஷைரின் மன்ஸ்பீல்ட் என்ற இடத்தில் உள்ள உணவு விடுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது அங்கே இருந்த ஊழியர் ஒருவர் விடுதியில் தலைப்பாகை அணியக் கூடாது, தலைப்பாகையை அகற்றுங்கள் என்று கூறியுள்ளார்.

அதற்கு அந்த இளைஞரோ, இது எனது தலைமுடியை பாதுகாக்கும். அதுமட்டுமின்றி நான் எனது மத வழிபாடு முறையாக அணிந்துள்ளேன் என்று விளக்கமளித்துள்ளார்.

ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாத உழியர், அவரை மீண்டும் அகற்றுங்கள் என்று கூறியுள்ளார். இளைஞர் மறுப்பு தெரிவிக்க உடனே அந்த ஊழியர் இளைஞரை வெளியில் இழுத்து தள்ளியுள்ளார்.

இதனால் மிகுந்த மனவேதனைக்குள்ளான அவர் இது குறித்து சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளார். இதைக் கண்ட இணையவாசிகள் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

அதன் பின் இந்த சம்பவத்தை அறிந்த விடுதி நிர்வாகம், இது போன்று நடந்து கொண்ட ஊழியரை பணியிலிருந்து நீக்கவிட்டதாகவும், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அமர்சிங் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

அதுமட்டுமின்றி எனது முன்னோர்கள் பிரித்தானியா இராணுவத்திற்காக உழைத்துள்ளனர். பிரித்தானியாவில் பிறந்த நாங்கள் நாட்டின் சட்ட திட்டத்தை மதிப்பவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்