கருப்பு மற்றும் வெள்ளை நிறத்துடன் வலம்வரும் அதிசய இரட்டை சகோதரிகள்

Report Print Athavan in பிரித்தானியா
535Shares
535Shares
lankasrimarket.com

இங்கிலாந்தில் இரட்டை சகோதரிகளில் ஒருவர் வெள்ளை நிறத்திலும், மற்றொருவர் கருப்பு நிறத்திலும் வலம்வருகின்றனர்.

இங்கிலாந்தில் வசிக்கும் இரட்டை சகோதரிகள் மார்சியா மற்றும் மில்லி பிக்ஸ்(11).

மார்சியா நீல நிற கண்கள் மற்றும் பொன்னிற முடியை கொண்டவராக வெளிறிய நிறத்தில் உள்ளார், இன்னொருவரான மில்லி பழுப்பு நிற கண்கள் மற்றும் கருப்பு முடி மற்றும் கருப்பு நிற தோற்றத்தில் உள்ளார்.

இவர்களின் தாயார் ஐரோப்பிய வம்சாவளியைச் சார்ந்தவராகவும், தந்தை ஜமைக்கா வம்சாவளியை சார்ந்தவர்களாகவும் இருக்கின்றனர்.

பிறந்த போது இருவரும் ஒரே மதிரியாகத் தான் இருந்ததாகவும், ஆனால் சுமார் 10 மாதங்களுக்குப் பின்னர் அவர்களின் தோல் மாறுபட்ட நிறங்களில் மாற்றத் தொடங்கியதாகவும் இருவரின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

மேலும் முதலில் மில்லிக்கு மாற்றம் ஏற்பட்டு, தோல் கருப்பு நிறத்தில் மாறியதாக கூறுகின்றனர்.

இந்த இரட்டையர்களின் மாறுபட்ட தோற்றத்திற்கான காரணம், இவர்கள் இருவரும் வெவ்வேறு விந்துவில் பிறந்தவர்கள் அதாவது ஒரு கரு முட்டையில் இரு விந்துக்களின் மூலம் பிறக்கும் சாதாரண இரட்டையர்களைப் போல் அல்லாமல், இருவேறு கருமுட்டையில் இருவேறு விந்துவின் மூலம் இவர்கள் பிறந்தவர்கள்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்