வீடு திரும்பும் இளைஞர்கள்: பிரிட்டனின் புதுப் பிரச்சினை

Report Print Fathima Fathima in பிரித்தானியா
743Shares
743Shares
lankasrimarket.com

பிரிட்டனைச் சேர்ந்த 25% இளைஞர்கள் தங்கள் பெற்றோர்களுடைய வீடுகளில் வாழ்வதற்காகத் திரும்பிவிட்டதாக லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் எனும் உயர் கல்வி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்திருக்கிறது.

காரணம், வேலைக்கு உத்தரவாதமில்லை, ஊதியம் போதவில்லை, வாடகைக்கு வீடுகள் கிடைப்பதில்லை, கிடைத்தாலும் வாடகை அதிகம். 1996-க்குப் பிறகு இப்போதுதான் இது உச்சபட்சமாகியிருக்கிறது.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்கள் தெரிவித்திருக் கும் கருத்துகள் பிரிட்டனின் இளைய தலைமுறை யின் நிலையை உணர்த்துகின்றன. ஹீதர், பிலிப் கட்லர் - கிரெடிடன், டேவன்: கட்லர் தம்பதியின் மகன் ஜிம் (24) முதலிலும் மகள் ஜெஸ்ஸிகா (22) பிறகும் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தனர். இருவரும் படித்து முடித்து வெளியில் இருந்தது இரண்டு ஆண்டுகள்தான்.

பிறகு, இருவரும் ஒருவர் பின் ஒருவராக வீட்டுக்கே வந்துவிட்டனர். “பிள்ளைகள் இருவரும் வீட்டைவிட்டுச் சென்ற பிறகு, வாழ்க்கையில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டதைப் போல உணர்ந்தேன். அது வினோதமாக இருந்தது.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, நானும் பிலிப்பும் மனங்களால் ஒன்றுபட்டோம். குழந்தைகள் கூட இருந்தபோது நிறைய நேரத்தை யும் ஆற்றலையும் அவர்களுக்காகச் செலவிட வேண்டியிருந்தது’’ என்கிறார் ஹீதர்.

ஆனால், நார்விச் பல்கலையில் கலைப் பாடம் படித்த அவர்களது மகன் ஜிம் வீடு திரும்பினான். மான்செஸ்டர் கலைக் கல்லூரியில் நெசவுப் பாடம் படித்த ஜெஸ்ஸிகா கடந்த ஆண்டு வீடு திரும்பினார். அவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும் என்று நம்பியிருந்த அவர்களின் பெற்றோருக்கு இதில் வருத்தம். மேலும், வயதுவந்த மகனும் மகளும் மீண்டும் வீட்டுக்குத் திரும்பிவிட்டதும் அவர்களுக்குச் சுமையைக் கூட்டியிருக்கிறது.

“பல வகைகளில் இது நன்றாகவும் இருக்கிறது. டீன் ஏஜர்களாக இருந்தபோது அவர்களைச் சமாளிப்பது கடினமாக இருந்தது. இப்போது பலவற்றை யும் தாங்களே செய்துகொள்கின்றனர். பொறுப்பாக நடக்கின்றனர். இன்னும் ஆறு அல்லது ஏழு ஆண்டு கள் எங்களோடுதான் இருப்பார்கள் என்றால், எங்க ளால் தாங்க முடியாது. இது இடைக்கால ஏற்பாடு தான் என்றால் பூரண மகிழ்ச்சியே’’ என்கிறார் ஹீதர்.

தென் கிழக்கு லண்டனில் வசிக்கும் டெரிக், கோலட் எட்வர்ட்ஸ் தம்பதியினரின் கதையும் இதுதான். “எங்களுக்கு ஜார்ஜியா (23), அப்பி (21) என்று இரு மகள்கள். வார்விக் பல்கலைக்கழகத்தில் இரண்டாண்டு படித்த பிறகு ஜார்ஜியா வீட்டுக்குத் திரும்பிவிட்டார். ஹெர்ட்ஃபோர்ட்ஷயரில் டிஜிட்டல் ஊடகப் பாடம் படிக்கும் அப்பி, சில வாரங்களில் வீடு திரும்பிவிடுவார்.

“நாட்டின் பொருளாதாரச் சூழல் காரணமாக அவர்கள் வீடு திரும்பிவிடுவார்கள் என்று எனக்குத் தெரியும். ஜார்ஜியா தன் வருமானத்துக்குள் வாழ நினைத்தாள், முடியவில்லை. மேலும், இரண்டு பேர் தங்குவதற்காக வீட்டில் சில மாற்றங்களைச் செய் கிறோம். சுதந்திரமாக இருக்கும்படி அவர்களுடைய அறைகள் மாற்றப்படும்’’ என்கிறார் டெரிக்.

“என் மனைவிக்கு மகள்கள் வீடு திரும்புவதில் மகிழ்ச்சிதான். அவர்கள் 50 அல்லது 60 வயதான பிறகு வந்தாலும் வரவேற்பாள். ஏன், அவர்கள் போவதைக்கூட விரும்ப மாட்டாள். நானுமே அவர் கள் வருவதை விரும்புகிறேன்; வேறு வழியில்லாமல் வருவதைத்தான் விரும்பவில்லை’’ என்கிறார் டெரிக்.

“குழந்தைகள் வீடு திரும்பும்போது அவர்களிடம் கவனமாகப் பேச வேண்டும். இது ஒன்றும் ஹோட்டல் இல்லை என்று எரிந்துவிழக் கூடாது. பல பெண் களுக்கு அவர்களுடைய அப்பாக்களால்தான் எரிச் சல் ஏற்படுகிறது என்கிறார்கள்.

மகள்களிடம் கவனமாகப் பேச வேண்டும். அதிகம் பேசக் கூடாது. இதையா போட்டுக்கொள்ளப் போகிறாய் என்றெல் லாம் கேட்டு எரிச்சலூட்டக் கூடாது. அவர்கள் வயது வந்தவர்கள், அவர்களுக்குத் தெரியும் எதைச் செய்ய வேண்டும் என்று’’ என்கிறார் டெரிக்.

ஹெர்ட்போர்ட்ஷயரைச் சேர்ந்த பாம் சுட்டன், கீத் ஷெல்டன் தம்பதியினர் இப்படிச் சொல்கிறார்கள்: பாம், கீத் தம்பதியின் மகள் இமோஜன் (24) லீட்ஸ் பல்கலைக்கழகத்தில் புவியமைப்பியல் பட்டம் முடித்துவிட்டு, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் வீட்டுக்கு வந்தார்.

சிறுமியாக இருந்தபோது பயன் படுத்திய அறையையும் பக்கத்து அறையையும் அவருக்கு ஒதுக்கித் தந்துள்ளனர். பெற்றோருடன் இருப்பது இமோஜனுக்கு மகிழ்ச்சியாகவே இருக் கிறது. நண்பர்களை விருந்துக்கு அழைக்கும் போதுதான் சங்கடப்படுகிறார். பெற்றோருடைய தனிமையில் குறுக்கிடுகிறோமோ என்ற கேள்வி அவரைக் குடைந்தெடுக்கிறது.

“அவள் படிக்கப் போனபோது வருத்தப்பட்டேன். படிக்காமல் முன்னேற்றம் இல்லை என்பதால் பொறுத்துக்கொண்டேன். இப்போது சமாளிக்க முடியாமல் வீட்டுக்கே திரும்பிவிட்டாள் என்றபோதும் வருத்தமாகவே இருக்கிறது’’ என்கிறார் தாய்.

பாமும் கீத்தும் பணி ஓய்வுபெற்றவர்கள். மகள் படிக்கப்போன பிறகு இருவரும் சுதந்திரம் அடைந்த தைப் போல உணர்ந்திருக்கிறார்கள். மகளைப் பார்த்துக்கொள்ள வேண்டிய வேலையில்லை, மகளுக்காக எதையும் செய்யத் தேவையில்லை என்று நினைத்தனர். இப்போது அதில் சற்றுப் பின்னடைவு.

“மகள் வீட்டுக்கு வந்துவிட்டாலும் அவள் என்ன செய்கிறாள், யாருடன் பேசுகிறாள் என்றெல்லாம் பார்க்கக் கூடாது என்று எனக்கு நானே கட்டுப்பாடுகளை விதித்துக் கொண்டுவிட்டேன்” என்று சொல்லிச் சிரிக்கிறார் பாம். அதே சமயம், இமோஜன் இரவு வெளியே போவதாக இருந்தால், திரும்பிவர டாக்சிக்குச் சொல்லுமாறு அம்மாவிடம்தான் கூறுகிறாள். இப்போது இது இரு தரப்புக்கும் வேலையாகிவிட்டது.

“எங்களுடைய தலைமுறை அதிர்ஷ்டம் செய்தது. படித்து முடித்ததும் தனி வீடு பார்த்து நண்பர்களுடன் இருந்தோம். வேலையில் முன்னேற்றம் ஏற்பட்டதும் திருமணம் செய்துகொண்டோம். அம்மா-அப்பாவுக்குப் பாரமாக இருந்ததில்லை.

இந்த வீட்டில் இருக்கும்வரை அவளுக்கு உரிய மரியாதையை அளிக்கத் தவற மாட்டோம். இங்கிருப்பதை அவள் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உணர வேண்டும். நான் அம்மா என்ற ஸ்தானத்தை மறந்துவிட்டேன். ஓரிரு ஆண்டுகளில் அவள் வேற்றிடம் சென்றுவிட முடியும் என்று நம்புகிறேன். 30 வயதுவரை அவள் வீட்டோடு இருப்பதை நான் விரும்பவில்லை என்கிறார் பாம்.

இதுகுறித்துப் பேசும் உளவியல் நிபுணர் லிண்டா பிளேர், “என்னதான் பெற்ற பிள்ளைகளாக இருந்தாலும் மீண்டும் வீட்டில் குடியேற அனுமதிக்கும் போது ஒப்பந்தம் செய்துகொள்வது நல்லது. வீட்டை எப்படிப் பராமரிக்க வேண்டும், எத்தனை மணி நேரத்துக்கு வீடு திரும்ப வேண்டும், வீட்டு வரி, மின்கட்ட ணம் போன்றவற்றை நேரத்துக்குக் கட்ட உதவ வேண்டும், வீட்டின் சிறு சிறு பழுதுகளுக்கும் வேறு செலவுகளுக்கும் அவர்களைப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும்’’ என்கிறார்.

‘‘வீட்டுக்கு வந்த பிள்ளைகளுக்காக எல்லா உதவி களையும் செய்துவிட வேண்டும் என்று பெற்றோர்கள் துடிக்க வேண்டியதில்லை. பல வேலைகளை அவர்களே சுயமாகச் செய்துகொள்ள அனுமதியுங்கள். அப்போதுதான் அவர்களால் சொந்தக் காலில் நிற்க முடியும்.

வீட்டையே சொர்க்கபுரியாக மாற்றினால் அவர்கள் அப்புறம் வெளியே போகவே நினைக்க மாட்டார்கள், அது அவர்களுக் கும் நல்லதல்ல’’ என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். சிறு வயதில் குழந்தைகள் வளர்வதை அருகிலிருந்து பார்த்திருந்தாலும் பெரியவர்களான பிறகு அவர்களை நன்கு அறிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பு என்றும் கூறுகிறார் லிண்டா பிளேர்.

- Thehindu

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்