72 மணி நேரத்தில் 3 பேர் நாடு கடத்தப்பட்டதால் பிரிட்டனில் பரபரப்பு

Report Print Athavan in பிரித்தானியா
420Shares
420Shares
ibctamil.com

பிரிட்டனில் இருந்து 72 மணி நேரத்திற்குள் பத்திரிக்கையாளர் உட்பட மூன்று பேர் வெளியேறப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

கனடாவை சார்ந்த பத்திரிகையாளர் ஒருவர் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி பிரிட்டனில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

இதன் மூலம் 72 மணி நேரத்திற்குள் பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்படும் மூன்றாவது நபர் இவர் ஆவார்.

இங்கிலாந்து பாதுகாப்பு லீக் இணை நிறுவனர் டாமி ராபின்சனை பேட்டி காண இங்கிலாந்துக்கு வர தயாராக இருந்த கனடாவை சார்ந்த பத்திரிகையாளர் Lauren Southern(22)-யை பிரிட்டன் எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் Calais-ல் ஆறு மணி நேரம் விசாரனை நடத்தியுள்ளனர்.

முன்னதாக வெள்ளியன்று, ஆஸ்திரியாவை சார்ந்த வலதுசாரி ஆர்வலர் மார்ட்டின் செண்டெர் மற்றும் அவரது அமெரிக்க காதலி பிரிட்டானி பேட்டிபோன் ஆகியோரும் வடக்கு லண்டனின் Luton Airportல் தரையிறங்கிய போது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் அந்நாட்டினுள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மார்ட்டின் செண்டெர் மற்றும் அவரது தோழியும் பிரிட்டனில் ஒரு கூட்டத்தில் பங்கு பெற திட்டமிட்டனர் மேலும் அவர்கள் தீவிர வலதுசாரி சிந்தனையுடையவர்கள் ஆகவே அது இங்குள்ள சில சமூகத்தை சார்ந்த மக்களுக்குள் பிரச்சனையை ஏற்படுத்துவது போல் அவரது பேச்சு அமையும் என்பதால் தடை விதிக்கப்பட்டது.

ஆனால் தனது வருகையை விரும்பாத சில இடது சாரி அமைப்புகளின் தூண்டுதலினால் தான் தமக்கு அனுமதி மறுக்கப்படதாக மார்ட்டின் செண்டெர் பிரிட்டன் அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனால் மார்ட்டின் செண்டெர் ஆதவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.

ஆனால் கனடாவை சார்ந்த பத்திரிகையாளர் Lauren Southern இங்கிலாந்து பாதுகாப்பு லீக் இணை நிறுவனர் டாமி ராபின்சனை பேட்டி காண வந்ததாலேயே அவருக்கும் தடை விதிக்கப்பட்டது.

அனால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள Lauren Southern தான் 6 மணி நேரம் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டதாகவும் தனது அலுவல் தொடர்பான ஆவனங்களில் பாகிஸ்தான் அடையாளங்கள் இருந்ததாலேயே தனக்கு தடை விதிக்கப்பட்டதாக பிரிட்டன் அதிகாரிகள் பொய் சொல்வதாக அவர் கூறியுள்ளார்.

மேலும் இவர்கள் மூவரும் பிரிட்டன்க்கு வருவது இங்கு உள்ள பொதுமக்களுக்கு நல்லதல்ல என்பதாலேயே தடை விதிக்கப்பட்டு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக பிரிட்டன் அதிகாரிகள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்