100 ஆண்டுகளில் பூமி அழியலாம்: எச்சரிக்கை விடுத்த ஸ்டீபன் ஹாக்கிங்

Report Print Athavan in பிரித்தானியா

இன்று மறைந்த விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அமெரிக்க ஜனாதிபதி ஜனாதிபதி டிரம்ப் செயல்பாடுகள் குறித்து இறப்பதற்கு சில மாதம் முன் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

உலக அழிவிற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் ஒருவகையில் காரணமாக இருப்பார். அமெரிக்க ஜனாதிபதியின் இயற்கைக்கு முரணான நடவடிக்கையும், சட்ட திட்டமும் உலக அழிவிற்கு காரணமாக இருக்கும் என தெரிவித்திருந்தார்.

மேலும் டிரம்பின் சட்டம் அனைத்தும் மக்களை அழிவை நோக்கி அழைத்து செல்கிறது என்றும், கடந்த டிசம்பர் 31ம் தேதி, புத்தாண்டு பிறக்கும் முன் ஸ்டீபன் ஹாக்கிங் இந்த எச்சரிக்கையை விடுத்திருந்தார்.


பாரிஸ் ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேறியதால் 'கிரீன்ஹவுஸ் கேஸ்' எனப்படும் பசுங்குடில் வாயுக்களை அதிக அளவில் வெளியேற்றினாலும் இனி கேட்பதற்கு ஆளில்லை

இது சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் விஞ்ஞானிகள் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.

தன் 75வது பிறந்த நாளை ஒட்டி கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் நடத்தப்பட்ட ஒரு அண்டவியல் மாநாட்டிற்கு வருகைத் தந்திருந்த பேராசிரியர் ஹாக்கிங், செய்தியாளர்களைச் சந்தித்து புவி வெப்பமாதல் என்ற ஒரு கோட்பாட்டையே நம்பாமல், பாரிஸ் ஒப்பந்தத்திலிருந்து வலுக்கட்டாயமாக அமெரிக்காவை வெளியேற்றியிருக்கிறார் டொனால்டு ட்ரம்ப்.

இதன் விளைவாக நிச்சயம் பெரிய அளவில் சுற்றுச்சூழல் சேதம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நம் அழகான இயற்கை உலகம் நம் குழந்தைகளுக்குக் கிடைக்குமா என்ற அச்சம் எழுகிறது என்று வருத்தத்துடன் தன் கருத்தை தெரிவித்தார்.

இப்போதிருக்கும் நிலை தொடர்ந்தால், நாம் இந்த பூமியில் இன்னும் 100 வருடங்கள் மட்டுமே வாழ முடியும். அதன் பின்னர் நாம் வேறு கிரகத்திற்குச் சென்றுவிட வேண்டும். இல்லையென்றால் இங்கேயே அழிந்துப்போக போகிறோம் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

புவி வெப்பமாதலைப் பொறுத்தவரை நாம் ஏற்கெனவே வரையறுக்கப்பட்ட எல்லையைத் தாண்டி விட்டோம். இதன் பின் நம் பூமியைப் பழையபடி பசுமையாகவும் குறைவான தட்பவெப்பமுடைய கிரகமாகவும் மாற்றுவது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகவே தோன்றுகிறது.

இந்நிலையில் ட்ரம்ப்பின் செயல்கள் நம் பூமியை இன்னும் மோசமான ஒரு நிலைக்குத் தள்ளிவிடலாம். வெள்ளிக் கிரகத்தை (Venus) போல் பூமியின் வெப்ப நிலையும் 150 டிகிரி செல்சியஸை தொடலாம், கந்தக அமில மழை பெய்யத் தொடங்கலாம் என்று தொடர் எச்சரிக்கை செய்தியை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்