ஸ்டீபன் ஹாக்கிங் மரணத்திற்கு முக்கிய காரணமான மோட்டார் நியூரான் நோய் குறித்து தெரியுமா?

Report Print Santhan in பிரித்தானியா

உலகின் மிகச்சிறந்த விஞ்ஞானிகளில் ஒருவராக கண்டறியப்பட்டவா் ஸ்டீபன் ஹாக்கிங். இவர் பிரித்தானியாவின் லண்டன் கேம்பிட்ஜ் பகுதியில் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் அவா் இன்று காலை இறந்து விட்டதாக அவரது குடும்ப உறுப்பினா்கள் தெரிவித்தனர்.

21 வயதில் நரம்பு நோயால் பாதிக்கப்பட்டதால், அவரது கை, கால் முதலிய ஊடலியக்கங்கள் பாதிக்கப்பட்டு பேசும் தன்மையை இழந்தார். இருப்பினும் தனது அறிவை பயன்படுத்தி கண்டுபிடித்த படைப்புகள் உலகளவில் போற்றப்பட்டன.

இதையடுத்து அவரது மரணத்திற்கு முக்கிய காரணம் மோட்டார் நியூரான் நோய் தான் என்று கூறப்படுகிறது.

அந்த மோட்டார் நியூரான் நோய் என்றால் என்ன? அந்த நோய் வந்தால் என்னென்ன பாதிப்புகள் எல்லாம் ஏற்படும் என்பதைப் பற்றிய முக்கிய நான்கு தகவல்களைப் பார்ப்போம்.

  • மூளை மற்றும் முதுகெலும்பு பகுதியில் இருக்கும் நரம்புகளை பாதித்து அதனை பலவீனமாக்கும்.
  • அபாயகரமான இந்த நோய் ஒருவரின் ஆயுட்காலத்தை குறிப்பிடத்தக்க அளவில் குறைக்கும்.
  • இதனை குணப்படுத்த முடியாது என்றாலும் அதன் வீரியத்தை கட்டுப்படுத்த முடியும்.
  • கால் பலவீனம், தெளிவற்ற பேச்சு, தசை பிடிப்பு, உடல் எடை இழப்பு மற்றும் கை தளர்ந்து போவது ஆகியன் மோட்டார் நியூரான் நோயின் ஆரம்பகால அறிகுறிகள் ஆகும்,

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்