வாழ்க்கையின் ஏழரை ஆண்டுகளை பிரித்தானியர்கள் எப்படி வீணடிக்கிறார்கள் தெரியுமா?

Report Print Arbin Arbin in பிரித்தானியா

பிரித்தானியர்கள் வாழ்க்கையின் ஏழரை ஆண்டுகளுக்கு நிகரான காலகட்டத்தை களைப்பாக உணர்வதில் செலவிடுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

குறித்த ஆய்வில் சராசரி பிரித்தானியர் ஒருவர் தினசரி சுமார் 3 மணி நேரம் மிகவும் சோர்வாக உணர்வதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இது ஒரு வாரத்தில் சுமார் 24 மணி நேரத்திற்கும் மேல் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மட்டுமின்றி 43 விழுக்காடு மக்கள் தூங்கி எழுந்து முதல் தூங்க செல்வது வரை எந்த நிலையில் தாம் சோர்வாகவோ களைப்பாகவோ உணர்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இரவு அதிக நேரம் கண்விழித்திருக்கும் பெரும்பாலான பிரித்தானியர்கள் அடுத்த நாள் மிகவும் சோர்வாக உணர்வதை பதிவு செய்துள்ளனர்.

மட்டுமின்றி குளிர்காலத்தில் வைட்டமின் டி குறைப்பாட்டால் சோர்வும் களைப்பும் ஏற்பட்டாலும், நீண்ட நேர வேலை மற்றும் போதிய உணவு எடுத்துக் கொள்ளாமை இதற்கு காரணமாக கூறப்படுகிறது.

வேலைக்கு செல்லும் பிரித்தானியர்கள் அதிகமாக சோர்ந்து காணப்படும் நாள் திங்கள் என்றும், இடையே புதன்கிழமையும் சோர்வாக காணப்படுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

சோர்வாக இருப்பதற்கு பிரித்தானியர்கள் கூறும் காரணம்:

  • இரவில் போதிய தூக்கமின்மை
  • அதிகாலையில் எழுந்திருக்க வேண்டிய நிலை
  • இரவு தூங்க தாமதிப்பது
  • மோசமான வானிலை
  • இருள் மூடிய காலை மற்றும் மாலை நேரம்
  • அதிகமான அல்லது போதிய உடற்பயிற்சி இன்மை
  • அதிக நேரம் வேலை பார்ப்பது
  • மோசமான உணவு பழக்கம்

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்