ஆற்றில் காரோடு மிதந்த சிறுமி: பிறந்தநாள் நேரத்தில் நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் காரோடு காணாமல் போன சிறுமி அங்குள்ள ஆற்றில் கண்டுப்பிடிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

வேல்ஸின் Carmarthenshire கவுண்டியை சேர்ந்தவர் கிம் ரவ்லண்ட்ஸ்.

இவரின் கார் நேற்று திருடு போன நிலையில் காரின் உள்ளே அவரின் மகள் கைரா மோரே (3)-வும் இருந்துள்ளார்.

இதுகுறித்து கிம் நேற்று பேஸ்புக்கில் வெளியிட்ட பதிவில், தனது கார் காணாமல் போயுள்ளது எனவும் அதன் உள்ளே கைரா இருக்கிறார் எனவும் பதிவிட்டிருந்தார்.

Credit: Facebook

இதோடு கார் குறித்து தகவல் தெரிந்தால் சொல்லுங்கள் மற்றும் இந்த பதிவை பகிருங்கள் எனவும் கிம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதே போல கிம்மின் சகோதரியும், பொலிசாரும் இது குறித்து பேஸ்புக்கில் பகிர்ந்தனர்.

இந்நிலையில் திங்கள் மாலை 6 மணிக்கு அங்குள்ள டிபீ ஆற்றில் கார் ஒன்றை பொலிசார் கண்டுப்பிடித்தனர்.

கார் உள்ளே சிறுமி கைராவும் இருந்த நிலையில் உடனடியாக அவள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கைரா உயிரிழந்தார்.

Credit: @iglwy/Twitter)

இது சம்மந்தமாக பொலிசார் யாரையும் இன்னும் கைது செய்யவில்லை.

அடுத்த வாரம் சிறுமி கைராவுக்கு பிறந்தநாள் வரும் நிலையில் இந்த மரணம் அவள் குடும்பத்தாருக்கு பலத்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பொலிசார் விடுத்துள்ள அறிக்கையில், சிறுமி கைரா இறந்துவிட்டார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.

சம்பவம் தொடர்பாக விசாரித்து வரும் நிலையில், சாட்சிகள் யாராவது ஆற்றில் கார் இறங்கியதை பார்த்திருந்தால் எங்களிடம் கூறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்