இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமண கேக் தயாரிப்பது இவர் தான்: வெளியான தகவல்

Report Print Arbin Arbin in பிரித்தானியா

மேகன் மெர்க்கல் மற்றும் இளவரசர் ஹரியின் திருமண கேக்கினை லண்டனை சேர்ந்த பிரபல பேக்கரி ஒன்று வடிவமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த பேக்கரியின் உரிமையாளர் Claire Ptak, இளவரசர் ஹரியின் திருமண கேக் தொடர்பில் முக்கிய தகவலையும் வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் மேகன் மெர்க்கல் திருமணம் எதிர்வரும் மே 19 ஆம் திகதி நடைபெற உள்ளது.

இதன் பொருட்டு இப்போதே ஆயத்த வேலைகள் அரண்மனை சார்பில் துவங்கப்பட்டுள்ளது.

கத்தோலிக்க மத நம்பிக்கை கொண்ட மெர்க்கல், இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொள்ள இருப்பதால் மீண்டும் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்.

தொடர்ந்து திருமண உடை தொடர்பாக தகவல் வெளியானது. தற்போது திருமண கேக் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

ஹரி மற்றும் மெர்க்கல் இருவரும் தங்கள் திருமண கேக் வடிவமைப்பாளராக கலிபோர்னியரான Claire Ptak என்ற பெண்மணியை தெரிவு செய்துள்ளனர்.

ஆர்கானிக் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி கேக் தயாரித்துவரும் Claire Ptak, இளவரசர் ஹரி திருமணத்திற்காக பூக்களாலான கேக் ஒன்றை வடிமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதை அரண்மனை வட்டாரமும் உறுதி செய்துள்ளதுடன், திருமணத்தில் கலந்து கொள்ளும் விருந்தினர்களும் மிகவும் விரும்புவர் என குறிப்பிட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்