லண்டனை உலுக்கும் கொலைகள்: கடந்த ஒருவாரத்தில் மட்டும் இத்தனை பேர் இறந்துள்ளனரா?

Report Print Santhan in பிரித்தானியா

லண்டனில் நேற்று இரவு இரண்டு பேர் மர்ம நபர்களால் குத்தி கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Walthamstow பகுதியில் நேற்று இரவு உள்ளூர் நேரப்படி 09.50 மணியளவில் 40 வயது மதிக்கத் தக்க நபர் கத்தியால் குத்துபட்டு உயிருக்கு போராடியுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பொலிசார் அவரை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பு வைத்துள்ளனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இறந்த நபரின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அது வந்த பின்னரே உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் இந்த கொலை தொடர்பாக 36 வயது மதிக்கத்தக்க பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதே போன்று Southall பகுதியின் Marlborough சாலையில் நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று காலை 06.14 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.

இறந்த நபர் குறித்து தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

மேலும் லண்டனின் முக்கிய பகுதிகளான Hackney, Houslow, Enfield, Chadwell Heath மற்றும் Walthamstow ஆகிய பகுதிகளில் கடந்த சில தினங்களில் ஐந்து கொலைகள் நடந்துள்ளன. இது குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதுமட்டுமின்றி கடந்த ஒருவாரத்தில் மட்டும் துப்பாக்கி மற்றும் கத்தியால் கொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்