ஐ.எஸ் முக்கிய தளபதியை நள்ளிரவில் சுட்டுக் கொன்ற பிரித்தானியா வீரர்

Report Print Santhan in பிரித்தானியா

ஐஎஸ் இயக்கத்தின் முக்கிய தளபதி ஒருவரை பிரித்தானிய வீரர் சுட்டுக் கொன்றிருப்பது தற்போது தெரியவந்துள்ளது.

சிரியாவில் ஐஎஸ் இயக்கத்தின் முக்கிய தளபதி அஹமூதியா ஷபாரிய ஒரு குறிப்பிட்ட இடத்தில் பதுங்கியிருப்பதாக தகவல் வந்துள்ளது.

இதனால் அப்பகுதிம் முழுவதும் கண்காணிக்கப்பட்டது. சுமார் 1,500 மீற்றருக்கு அப்பால் இருந்து பிரித்தானியாவின் எஸ்ஏஸ் ஸ்னைப்பர் வீரர்கள் கண்காணித்து வந்தனர்.

அப்போது அஹமூதியா ஷபாரிய நள்ளிரவில் ஒரு ஜன்னல் ஓரத்தில் சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் நின்றுள்ளார். இதைக் கண்ட பிரித்தானியா வீரர் சுமார் ஒரு கிலோ மீற்றர் தொலைவில் இருந்து அஹமூதியா ஷபாரியவை சுட்டுக் கொன்றார்.

இப்படி குறி தப்பால் சுட்டுத் தள்ளிய பிரித்தானியா வீரருக்கு பாராட்டுக்கள் குவிந்து வந்தாலும், பாதுக்காப்பு நடவடிக்கையின் காரணமாக அவரது பெயர் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்