லண்டனில் மீண்டும் ஒருவர் கொலை: 13 நாளில் 11-வது கொலை!

Report Print Raju Raju in பிரித்தானியா

லண்டனில் 50 வயதான நபர் ஒருவர் திங்கட்கிழமை கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த 13 நாட்களில் மட்டும் நகரில் 11 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

டூத்திங் நெடுஞ்சாலையில் திங்கள் மாலை 3.12 மணிக்கு தகவலின் பேரில் பொலிசார் விரைந்தனர்.

அங்கு 50 வயதான நபர் கத்தியால் குத்தி கொல்லப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.

இது சம்மந்தமாக சந்தேகத்தின் பேரில் 44 வயதான நபரை பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

கடந்த 13 நாட்களில் லண்டனில் நடந்துள்ள 11-வது கொலை இதுவாகும்.

கடந்த ஞாயிறு இரவு ஆப்ரஹாம் பத்ரு (26) என்ற இளைஞர் கிழக்கு லண்டனில் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

இது பத்தாவது கொலையாகும்.

இது தொடர்பாக சாட்சிகள் யாராவது இருந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என பொலிசார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்