குற்றவாளிகளை பிடிக்க பிரித்தானிய பொலிஸாரின் புதிய நடவடிக்கை

Report Print Murali Murali in பிரித்தானியா

பிரித்தானியாவில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அந்நாட்டு பொலிஸார் தமது சீருடையில் பாதுகாப்பு கெமராக்களை பொருத்திக்கொண்டு கடமையாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், குறித்த நடவடிக்கையினை அடுத்த மாதமளவில் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விரிவுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ஏதேனும் குற்றச்செயல்கள் இடம்பெற்றால், சம்பவத்திற்கு பின்னர் முக்கிய ஆதாரமாக குறித்த கெமராவின் காணொளி எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

தற்போது பிரித்தானியா முழுவதும் ஆடையில் பொருத்தக்கூடிய 36 ஆயிரம் கெமராக்கள் பயன்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெஸ்ட் யோர்க்ஷயர் பொலிஸ் அதிகாரி,

“நாங்கள் பார்க்கும் சம்பவத்தை துள்ளியமாக காண்பிக்கவும், அந்த தருனத்தில் எடுக்கும் முடிவையும் நியாயப்படுத்தவும் இந்த கெமராக்கள் எங்களுக்கு பக்கபலமாக இருக்கின்றது.

எங்கள் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் அதிகரிக்கின்றது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த கெமராக்கள் மக்களின் செயற்பாட்டில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெஸ்ட் யோர்க்ஷயர் பொலிஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்