பிரித்தானியாவில் விஜய் படத்திற்கு கிடைத்த பெரிய கெளரவம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரபல திரைப்பட நடிகரான விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் பிரித்தானியாவின் தேசிய விருதை தட்டிச் சென்றுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவான மெர்சல் திரைப்படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பின்பும் பல சாதனைகளை படைத்தது.

அப்படத்திற்கு தமிழ்நாட்டில் பல விருதுகள் கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் இப்படத்திற்கு பிரித்தானியாவில் பெரிய கெளரவம் கிடைத்துள்ளது. பிரித்தானியாவின் நான்காவது தேசிய திரைப்பட விழா 2018-ஆம் ஆண்டிற்கான விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த விருதுக்காகன பட்டியலில், பிரான்ஸ், ரஷ்யா, சிலி, தென்னாப்பிரிக்கா, சுவீடன் நாட்டுப் படங்கள் இருந்தன. எனினும் இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட மெர்சல் படம் இந்த விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்