வடமேற்கு லண்டனில் நச்சுவாயுவை சுவாசித்த ஐவர் வைத்தியசாலையில் - இருவர் உயிரிழப்பு

Report Print Thayalan Thayalan in பிரித்தானியா
வடமேற்கு லண்டனில் நச்சுவாயுவை சுவாசித்த ஐவர் வைத்தியசாலையில் - இருவர் உயிரிழப்பு

வடமேற்கு லண்டனின் எட்ஸ்வெயார் (Edgware) பகுதியில் ஒருவகையான நச்சுவாயுவை சுவாசித்த இருவர் உயிரிழந்ததுடன், 5 பேர் பாதிப்படைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பகுதியிலுள்ள வீடொன்றிலேயே, நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

இதில் ஆண்கள் இருவர் உயிரிழந்ததுடன், 2 சிறுவர்கள் உட்பட 5 பேர் பாதிப்படைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்துள்ள பொலிஸார், இவர்கள் கார்பன் மொனோக்ஸைட்டை சுவாசித்துள்ளமை தெரியவந்துள்ளதாகவும், கூறியுள்ளனர்.

மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக, இதுவரையில் எவரும் கைதுசெய்யப்படவில்லையெனவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்