பிரித்தானியாவில் வீடுகளின் விலை உயர இதுதான் காரணம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா

புலம்பெயர்தலின் தாக்கத்தால் பிரித்தானியாவில் வீடுகளின் விலைகள் 25 ஆண்டுகளில் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் Dominic Raab தெரிவித்துள்ளார்.

பிரெக்சிட்டுக்குப் பின் அமைக்கப்படவிருக்கும் புலம்பெயர்தல் விதிகள் வீடுகளின் தேவையின்மீது புலம்பெயர்தல் ஏற்படுத்தும் எதிர்மறை விளைவுகளைக் கருத்தில் கொண்டு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய புலம்பெயர்தல் திட்டங்களை வகுப்பதற்கு உதவியாக அறிக்கை வெளியிட இருக்கும் புலம்பெயர்தல் ஆலோசனைக் கமிட்டிக்கு அவர் தனது கருத்துக்களை தெரியப்படுத்தியுள்ளார்.

“எவ்வளவு அகதிகளை நாடு ஏற்றுக்கொள்கிறதோ அந்த எண்ணிக்கை நாம் ஆண்டொன்றிற்கு எத்தனை புதிய வீடுகளைக் கட்ட வேண்டும் என்பதன்மீது தாக்கத்தை ஏற்படுத்தும்”என்றும் அவர் கூறினார்.

1991 முதல் 2016 வரையிலான 25 ஆண்டுகளில் வீடுகளின் விலைகள் 20 சதவிகிதம் வரை உயர்ந்துள்ளதாக தேசிய புள்ளி விவரங்கள் அலுவலகத்தின் அறிக்கை தெரிவிப்பதாக அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில் புகலிடம் கோருவோர் ஒரு இடத்திற்கு இடம்பெயரும்போது விலை குறைந்த வீடுகளின் விலைகள் இன்னும் குறைவதாக ஒரு அறிக்கை கூறுகிறது. 2004 முதல் 2015 வரை மேற்கொண்ட ஆய்வுகளில் விலையுயர்ந்த வீடுகளின்மீது எந்த தாக்கமும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.

2016ஆம் ஆண்டு பிரெக்சிட்டுக்காக வாக்களித்த பகுதிகளில் அதிக தாக்கம் இருந்ததாக அந்த அறிக்கை கூறுகிறது.

அதேபோல் புகலிடம் தேடுவோர் மற்ற புலம்பெயர்ந்தோர் மீது ஏற்படுத்தும் அழுத்தத்தை விட உள்ளூர் மக்கள் மீதே அதிக அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் அந்த ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்