பிரித்தானியாவில் பரிதாபமாக இறந்த நபர்: குற்றவாளிகளை தேடும் பொலிசார்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியாவில் ஒருவரை இரண்டு பேர் தாக்கியதால் அவர் பரிதாபமாக உயிரிழந்ததையடுத்து, பொலிசார் அந்த நபர்கள் குறித்த தகவல் தெரிவித்தால் 20,000 பவுண்ட் வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் உள்ள Trafalgar Square பகுதியில் கடந்த ஆண்டு ஜுன் மாதம் 3-ஆம் திகதி 51 வயது மதிக்கத்தக்க O’Beirne என்ற நபர் இரண்டு அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டார்.

இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவர் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் 20-ஆம் திகதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தலையில் பலத்த காயம் ஏற்பட்டதே இவருடைய மரணத்திற்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து பொலிசார் இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் சம்பவ தினத்தன்று நடந்த சிசிடிவி காட்சிகளை பொலிசார் வெளியிட்டு ஒரு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

கடந்த Trafalgar Square பகுதியில் O’Beirne என்ற நபரை இரண்டு நபர்கள் துரத்தி வருகின்றனர். அதில் ஒருவர் அவரை தாக்கிய போது நிலைதடுமாறி கீழே விழுகிறார்.

அதன் பின் அவருடன் வந்த நண்பர்கள் எல்லாம் சென்றுவிடுகின்றனர். அங்கிருந்த சிலர் இந்த சம்பவத்தை பார்த்துள்ளீர்கள்.

O’Beirne-க்கு நீதிகிடைக்க வேண்டும் எனில் இந்த சிசிடிவி காட்சியில் உள்ள நபர்களைப் பற்றி உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவியுங்கள்.

அந்த நேரத்தில் யாரேனும் அங்கு செல்பி எடுத்திருப்பீர்கள், அல்லது வீடியோ எடுத்திரூப்பிர்கள் அப்போது இந்த நபரின் உடைகள் தொடர்பாக பதிவாகியிருந்தால் உடனடியாக தெரிவியுங்கள்.

அதுமட்டுமின்றி இந்த சம்பவத்தின் போது ஒரு பெண் O’Beirne தாக்கப்பட்ட பின் அருகே சென்று அதிர்ச்சியடைகிறார். இதன் காரணமாக அவருக்கு குறித்த நபர்களைப் பற்றி தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்பதால் தகவல் தெரிவிக்கும் படி கூறியுள்ளனர்.

மேலும் O’Beirne மீது தாக்குதல் நடந்த அன்றைய தினத்தின் மாலையில் தான் லண்டன் பாலத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்