பிரித்தானிய இளவரசர் வில்லியம்- கேட் தம்பதியினருக்கு விரைவில் குழந்தை பிறக்கவிருக்கிறது என்பது மருத்துவமனையின் முன்பு வைக்கப்பட்டுள்ள மஞ்சள் நிற பாதாகை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தம்பதியினக்கு ஏற்கனவே ஜார்ஜ், சார்லோட் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவது குழந்தைக்கு கருவுற்றிருக்கிறார் கேட்.
குழந்தை பிறக்கும் திகதி அரச குடும்பத்தால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில், St Mary’s மருத்துவமனையின் Lindo Wing of என்ற பிரசவ விடுதி முன்னிலையில் ஒரு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
அதில், ஏப்ரல் 8 ஆம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை யாரும் வாகனங்களை பிரசவ விடுதி முன்பாக நிறுத்துவதற்கு அனுமதி இல்லை என வைக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கேட் எந்நேரத்திலும் பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படலாம் என கூறப்படுகிறது, ஜார்ஜ் மற்றும் சார்லோட் ஆகிய இருவரும் இந்த மருத்துவமனையில் தான் பிறந்தார்கள், அவர்கள் பிறப்பதற்கு முன்பும் இதுபோன்ற பதாகை வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.