பிரித்தானியா இளவரசர் திருமணம்: இளவரசர் விடுத்த திடீர் கோரிக்கை

Report Print Balamanuvelan in பிரித்தானியா
322Shares
322Shares
ibctamil.com

அடுத்த மாதம் 19ஆம் திகதி இளவரசர் ஹரி மற்றும் மெர்க்கலின் திருமணம் நடைபெற உள்ள நிலையில் தங்கள் திருமணத்திற்காக யாரும் பரிசுப்பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்கள் திருமணத்திற்கு பரிசு பொருட்களை அனுப்புவதற்கு பதில் அறக்கட்டளைகளுக்கு உதவுமாறு அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ஏழு அறக்கட்டளைகளை தேர்ந்தெடுத்துள்ள அவர்கள் அந்த அறக்கட்டளைகளுக்கு உதவுவதால் ஏராளமானவர்கள் நன்மை அடைவார்கள் என்று தெரிவித்துள்ளனர்.

திருமணத்திற்கு நேரடியாக வருகை தருபவர்கள் தங்கள் விருப்பப்படி பரிசு கொடுப்பதையோ அல்லது அறக்கட்டளைகளுக்கு தானமளிப்பதையோ தெரிந்து கொள்ளலாம்.

தம்பதியினர் தங்களுக்கு விருப்பமான விளையாட்டு, பெண்கள் முன்னேற்றம், இயற்கை பாதுகாப்பு, சுற்றுச்சூழல், HIV மற்றும் ராணுவம் தொடர்பான அறக்கட்டளைகளைத் தேர்வு செய்துள்ளனர்.

ஆனால் இந்த அறக்கட்டளைகள் எதனுடனும் இளவரசருக்கோ மெர்க்கலுக்கோ நேரடியாக எந்த தொடர்பும் கிடையாது என்பதை அரண்மனை வட்டாரம் உறுதி செய்துள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்