பிரித்தானிய மகாராணியின் கணவர் பிலிப் இறந்துவிட்டால் என்ன நடக்கும்?

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
595Shares
595Shares
ibctamil.com

பிரித்தானிய மகாராணியின் கணவரும், இளவரசருமான பிலிப் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கடந்த ஆண்டு மே மாதத்தில் இருந்து அரச குடும்பத்து பணியில் இருந்து ஓய்வு பெற்றார்.

96 வயதாகியுள்ள இவர் எவ்வித பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவில்லை, சமீபத்தில் இவருக்கு இடுப்பு எலும்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

உடல்நிலை சரியில்லா இவர் எந்த நேரத்திலும் இறக்க நேரிடலாம் என்பதால், இளவரசர் பிலிப் இறந்தபின்னர், என்ன நடக்கும் என்பது குறித்து பர்க்கிங்ஹாம் அரண்மனையின் மூலம் நெறிமுறைகள் வெளியிடப்பட்டன.

இளவரசர் பிலிப் இறந்துவிட்டால் என்ன நடக்கும்?
  • பிலிப் இறந்துவிட்டால் இவரது இறப்பு செய்தி முதல் முதலாக பிபிசி நாளிதழில் தான் வெளியாகவேண்டும். மேலும் இரவில் நித்திரையின் போது இவர் இறந்தவிட்டாலும், இறப்பு செய்தி மக்களுக்கு காலை 8 மணியளவில் தெரிவிக்கப்படும்.
  • Westminster அரங்கத்தில் இறுதி அஞ்சலி நடைபெறும். இவரது இறுதி அஞ்சலியில் குடும்பத்தார், நண்பர்கள் மற்றும் உலக தலைவர்கள் மட்டுமே கலந்துகொள்வார்கள். அது மட்டுமின்றி, இவரது உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படமாட்டாது.
  • Frogmore Gardens - இல் இவரது உடல் அடக்கம் செய்யப்படும். ஏனெனில் இந்த இடம் மிக முக்கியமான இடமாக இளவரசர் கருதுகிறார். Prince Andrew's மற்றும் Prince Edward's - இன் குழந்தைக இந்த தோட்டத்தில் தான் விளையாடி மகிழ்ந்தனர். மகாராணி எலிசபெத்தின் தந்தை ஜார்ஜ் vi தனது தேனிலவை இந்த தோட்டத்தில் தான் கொண்டாடியுள்ளார்.
  • பொதுவாக அரச குடும்பத்து நபர்கள் இறந்துவிட்டால், Westminster Abbey மற்றும் St. George's Chapel ஆகிய இடங்களில் தான் அடக்கம் செய்யப்படுவார்கள். ஆனால், பிலிப் தெரிவு செய்துள்ள தோட்டம், தனது உறவினர்களோடு ஒன்றிணைந்த ஒரு இடம் என்பதால் இந்த இடத்தை தெரிவு செய்துள்ளார்.
  • கணவரின் இறப்புக்கு பின்னர் 8 நாட்கள் துக்கம் அனுசரிக்கும் மகாராணி, அதன் பின்ன தனது பணிகளில் ஈடுபடுவார். மேலும் பொதுநிகழ்வுகளில் கலந்துகொள்வார். அரசு குடும்பத்து நபர்கள் 30 நாட்கள் கடைபிடிப்பார்கள்.
  • இவரது இறப்பிற்கு பின்னர் அரச குடும்பத்து ஆட்சியல் எவ்வித மாற்றமும் ஏற்படாது.
  • ராணி குடும்பத்தினரின் பதவிகளில் ராணி எலிசபெத் உயிருடன் இருக்கும் வரை எவ்வித மாற்றமும் ஏற்படாமல் அப்படியே இருக்கும்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்