வடகொரியாவைக் கண்காணிக்க மூன்றாவது போர்க்கப்பலை அனுப்பிய பிரித்தானியா

Report Print Balamanuvelan in பிரித்தானியா
141Shares
141Shares
lankasrimarket.com

தடை செய்யப்பட்ட கடல் வர்த்தகத்தின்மூலம் தனது அணு ஆயுத திட்டத்திற்கு வட கொரியா பணம் புரட்டுவதாக சந்தேகங்கள் எழுந்துள்ள நிலையில் அந்நாட்டைக் கண்காணிப்பதற்காக பிரித்தானியா மூன்றாவது போர்க்கப்பலை அனுப்பியுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை வட கொரியாமீது விதித்துள்ள தடைகளை அமல்படுத்துவதற்கு உதவும் வகையிலும், இதர கூட்டு நாடுகளுடன் இணைந்து போர் ஒத்திகைகளை மேற்கொள்வதற்காகவும் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ள HMS Sutherland உடன் HMS Albion என்னும் போர்க்கப்பலை பிரித்தானியா அனுப்பியுள்ளது.

HMS Argyll என்னும் போர்க்கப்பலும் இந்த ஆண்டில் அவுஸ்திரேலியா, மலேசியா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட இருப்பதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்திருந்தது.

பாதுகாப்புத் துறை செயலர் Gavin Williamson இந்த நடவடிக்கை அணு ஆயுத ஏவுகணை சோதனைகளை மேற்கொள்ளும் வட கொரியாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும், ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்தவும் உதவும் என்று கூறினார்.

வட கொரியா சொல்வது ஒன்று செய்வது ஒன்று என்று இல்லாமல் எப்போது தான் சொல்வதை ஒழுங்காகச் செய்கிறதோ அதுவரை தனது கூட்டு நாடுகளுடன் இணைந்து அந்த பகுதியின் பாதுகாப்பை மட்டுமல்லாது பிரித்தானியாவின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் தொடர்ந்து வட கொரியாவின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் ஏற்கனவே விதிக்கப்பட்டுள்ள தடைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்து என்றும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானம் ஒன்று வட கொரியாவுக்கு கப்பல்கள் மூலம் பொருட்கள் பரிமாற்றம் செய்வதைத் தடை செய்துள்ளபோதிலும் சில கப்பல்கள் தடையை மீறின.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹாங்காங் பதிவு எண் கொண்ட கப்பல் ஒன்று வட கொரிய கப்பல் ஒன்றிற்கு 600 டன் எண்ணெயை அளித்ததாக சந்தேகம் எழுந்ததின்பேரில் கைப்பற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்