இளவரசர் ஹரியின் திருமணத்தில் இலங்கை பெண்ணுக்கு வழங்கப்பட்ட பொறுப்பு

Report Print Steephen Steephen in பிரித்தானியா
990Shares
990Shares
ibctamil.com

பிரித்தானிய அரச குடும்பத்தின் அடுத்த திருமண வைபவத்தை எதிர்வரும் 19 ஆம் திகதி லண்டனில் உள்ள புனித ஜோர்ஜ் தேவாலயத்தில் நடத்த சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இளவரசர் ஹரி மற்றும் மேகன் மேர்க்கல் ஆகியோரின் இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளன.

அரச குடும்ப மணமகன் மற்றும் மணமகளின் திருமண ஆடைகளை வடிவமைப்பது யார், திருமணத்திற்கு தெரிவு செய்யப்படும பூக்கள் என்ன என்பன சர்வதேச ஊடகங்களில் பரப்பரப்பான செய்திகளாக இருக்கின்றன.

இந்த நிலையில் அரச குடும்பத்தின் திருமண நிகழ்வு தொடர்பான செய்தி சேகரிக்க அனுமதி வழங்கப்பட்ட ஊடகவியலாளர்களில் இலங்கை பெண் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

கனேடிய ஒளிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தொலைக்காட்சியில் பிரதான செய்தி வாசிப்பாளராக பணிப்புரியும் ஹேன் மேரி மெதிவக்க என்ற இலங்கை பெண் ஊடகவியலாளருக்கே இந்த சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

கனடாவில் விருது பெற்ற செய்தி வாசிப்பாளரான ஹேன் மேரி மெதவக்கவுக்கு கடந்த 2011 ஆம் ஆண்டு டொரன்டோ பெண்மணி என்ற கௌரவ விருது வழங்கப்பட்டது.

1975 ஆம் ஆண்டு கண்டி, தும்பர பிரதேசத்தில் பிறந்த மேரி மெதவக்க, பெற்றோருடன் கனடாவிற்கு சென்று அங்கு நிரந்தரமாக குடியேறியுள்ளார்.

தனது 18 வது வயதில் கனேடிய இளைஞர்கள் தொடர்பான ஆவண நிகழ்ச்சி தயாரிக்க ஆரம்பித்த அவர், படிப்படியாக தொழில் முறை வாழ்க்கையை வெற்றிகரமாக முன்னெடுத்து வந்துள்ளார்.

மேரி மெதவக்க, கனடாவில் உள்ள பிரதான செய்தி வாசிப்பாளர் மட்டுமல்லாது நிகழ்ச்சிகளை தொகுத்து வங்குவதில் பெற்றுள்ள புகழ் காரணமாகவே கனேடிய ஒளிப்பரப்புக் கூட்டுத்தாபனம் மற்றும் தொலைக்காட்சி என்பது இளவரசர் ஹரி மற்றும் மேர்கன் மேர்க்கல் திருமண வைபவத்தின் செய்தி சேகரிக்கும் பொறுப்பை ஹேன் மேரி மெதவக்கவுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்