பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? உளறிக்கொட்டிய இளவரசர் வில்லியம்ஸ்

Report Print Athavan in பிரித்தானியா
612Shares
612Shares
ibctamil.com

பிரித்தானிய ராஜ குடும்பத்தில் அடுத்து பிறக்க போகும் வாரிசு ஆண் குழந்தையாக இருக்கும் என்று வாய் தவறி உளறியுள்ளார் இளவரசர் வில்லியம்ஸ்.

நேற்று வில்லா பார்க்கில் நடைபெற்ற Aston Villa மற்றும் Cardiff City அணிகளுக்கு இடையேயான பரபரப்பான கால்பந்து போட்டியை Aston Villa அணியின் முன்னாள் வீரர் John Carew உடன் இளவரசர் வில்லியம்ஸ் கண்டு ரசித்தார்.

த்ரில்லான அந்த போட்டியில் Aston Villa அணி வீரர் Jack Grealish ஆட்டத்தின் இறுதியில் அடித்த அபாரமான கோல் காரணமாக Cardiff City அணியை வீழ்த்தி Aston Villa அணி வெற்றி பெற்றது.

இதன் மூலம் இளவரசர் வில்லியம்ஸின் மனம் கவர்ந்த அணியான Aston Villa சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.

பரபரப்பான இந்த போட்டியில் Aston Villa அணி வெற்றிபெற முக்கிய காரணமாக விளங்கிய Jack Grealish யை புகழும் விதமாக ரசிகர்கள் முன்னிலையில் பேசிய இளவரசர் வில்லியம்ஸ், இன்னும் சில தினங்களில் பிறக்கப்போகும் எனது குழந்தையின் பெயர் Jack அல்லது Jackie என வைக்க விரும்புவதாக கூறீனார்.

தன் குழந்தை பற்றி அவசரத்தில் வாய் தவறி வில்லியம்ஸ் கூறியதால், ராஜ குடும்பத்தின் அடுத்த வாரிசு ஆண் குழந்தை என்பது தற்போது தெளிவாகியுள்ளது.

இறுதியாக இளவரசர் வில்லியம்ஸ்க்கு தனது Aston Villa அணி சீறுடையை Jack Grealish பரிசாக வழங்கினார்.

இன்னும் சில தினங்களில் பிரித்தானிய ராஜ குடும்பத்தில் வாரிசு பிறக்க இருந்த நேரத்தில் பிறக்க போவது ஆண் குழந்தை என வில்லியம்ஸ் உளறிக்கொட்டியுள்ளது மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்