பிரித்தானியாவில் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை!

Report Print Balamanuvelan in பிரித்தானியா
876Shares
876Shares
lankasrimarket.com

பிரித்தானியாவின் Wolverhampton பகுதியிலுள்ள பூங்கா ஒன்றில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்ட 14 வயது சிறுமி Viktorija Sokolova பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

அவளை பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கி கொலை செய்ததாக 16 வயது சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான்.

கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களுக்காக அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான்.

Viktorija கடந்த புதனன்று காணாமல் போனாள், பொலிசார் அவளைத் தேடி வந்த நிலையில் பூங்கா ஒன்றில் அவள் இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது.

PA

தலையில் காயத்தின் காரணமாக அவள் உயிரிழந்திருந்தாள். அவளைக் கொலை செய்ததாக சந்தேகத்தின்பேரில் 17 வயது இளைஞன் ஒருவனும் கைது செய்யப்பட்டுள்ளான்.

ஜாமீனில் விடப்பட்டுள்ள அவன்மீது தொடர்ந்து விசாரணை நடத்தப்பட உள்ளது, சட்டச் சிக்கல்கள் ஏற்படலாம் என்பதனால் கைது செய்யப்பட்டவர்கள் யார் என்பதை பொலிசார் தெரிவிக்கவில்லை.

Viktorija கண்டெடுக்கப்பட்ட West Parkஇல் தடயவியல் நிபுணர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருவதால், பூங்கா மூடப்பட்டுள்ளது.

Birmingham Mail

SWNS.com

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்