லண்டனில் வாள்வெட்டுக்கு பலியான இளைஞர்: பொலிசார் பொதுமக்களுக்கு கோரிக்கை

Report Print Arbin Arbin in பிரித்தானியா

கிழக்கு லண்டனில் மர்ம நபர்களால் இளைஞர் ஒருவர் கத்தியால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு லண்டனில் உள்ள Forest Gate பகுதியில் 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் மர்ம நபர்களால் கத்தியால் தாக்குண்டு கொல்லப்பட்டுள்ளார்.

இதுவரை லண்டன் மாநகரில் மட்டும் கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 60 என உயர்ந்துள்ளது.

இரவு 10.50 மணியளவில் Forest Gate பகுதியில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளதாக பெருநகர பொலிசார் உறுதி செய்துள்ளனர்.

மர்ம நபர்களின் கொலை வெறி தாக்குதலில் படுகாயமடைந்த குறித்த இளஞர் சம்பவயிடத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் பெருநகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை எவரையும் பொலிசார் கைது செய்யவில்லை என தெரிய வந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் தகவல் கிடைக்கப்பெற்றதும் மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்ஸ் உடன் சம்பவயிடத்திற்கு விரைந்ததாகவும்,

ஆனால் படுகாயமடைந்த இளைஞரின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது எனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இளைஞரின் உறவினர்களுக்கு தகவல் அளிக்கும் பணியை பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும், உடற்கூறு சோதனை உள்ளிட்ட நடவடிக்கைகள் உடனடியாக நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக நெரடி சாட்சிகள் எவரேனும் இருப்பின், பொலிசாருக்கு தகவல் அளித்து விசாரணைக்கு உதவும்படி கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers