ஸ்ரீதேவி இறப்புக்கு பின் ஒன்றிணைந்த குடும்பத்தினர்: லண்டனில் கொண்டாட்டம்

Report Print Santhan in பிரித்தானியா

பிரபல திரைப்பட நடிகையான ஸ்ரீதேவி கடந்த பிப்ரவரி மாதம் 24-ஆம் திகதி மரணமடைந்தார், அவரது மரணத்திற்கு பின் போனிர் கபூர் குடும்பம் ஒன்றாக இணைந்தது.

ஏனெனில் போனி கபூர் ஸ்ரீதேவியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னர் மோனா என்பவரை திருமணம் செய்திருந்தார். அவர்களுக்கு அர்ஜுன் கபூர், அன்சுலா கபூர் என்ற பிள்ளைகள் இருந்தனர்.

தன் அம்மாவின் வாழ்க்கையை கெடுத்ததே ஸ்ரீதேவி தான் என்கிற கோபத்தினால் அர்ஜுன் கபூர், போனி கபூர் குடும்பத்திடம் தொடர்பில் இல்லாமல் இருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணத்திற்கு பின் அவரது மகள்களான ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் ஆகியோர் மீது அர்ஜுன் கபூர் அதிக பாசம் காட்ட ஆரம்பித்தார். அவர்களை தன்னுடைய வீட்டிற்கும் அழைத்திருந்தார்.

இதையடுத்து தற்போது தடக் என்ற படத்தில் நடித்து வந்த ஜான்வியின் படப்பிடிப்பு நேற்றோடு முடிவு பெற்றது. அர்ஜுன் கபூரும் தன்னுடைய அடுத்த படமான Namastey England படப்பிடிப்பிற்காக லண்டன் செல்லவுள்ளார்.

அப்போது ஸ்ரீதேவி மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் அவருடன் லண்டனில் சில நாட்கள் தங்கவுள்ளதாகவும், அப்போது பல இடங்களை இவர்கள் சுற்றிப்பார்க்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர்களுடன் அர்ஜுன் கபூரின் தங்கையான அன்சுலா கபூரும் இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்