கவலையில் பிரித்தானிய மகாராணி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா

தான் ஆசையாக வளர்த்து வந்த வளர்ப்பு நாய் இறந்துவிட்டதால் பிரித்தானிய மகாராணி கவலையில் இருப்பதாக அரண்மணை வட்டாரம் தெரிவித்துள்ளன.

Corgi இனத்தை சேர்ந்த Willow என்ற நாய்குட்டியை இளவரசி இரண்டாம் எலிசபெத், மகாராணியின் 18வது பிறந்தநாளுக்கு பரிசாக அளித்துள்ளார். அன்றிலிருந்து இந்த நாய் மகாராணியின் செல்லநாயாக இருந்து வந்தது. நாய்க்கு புற்றுநோய் தொடர்பான உடல்நலப்பிரச்சனை இருந்ததால், உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நாய், தனது பெற்றோர் உயிருடன் இருக்கையில் தனக்கு பரிசாக கிடைத்தது. இதனால், தனது பெற்றோருடனான கடைசி இணைப்பு மற்றும் தன் குழந்தைப்பருவத்திற்கு திரும்பிச்செல்லும் நினைவுகள் என ஒரு யுகத்தின் முடிவைப் போல மகாராணி உணர்கிறார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்