தந்தை வயதுடைய நபர் மீது காதல்: 17 வயது சிறுமி செய்த மோசமான செயல்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு 44 வயதான அமெரிக்கருடன் காதல் ஏற்பட்ட நிலையில், அதற்கு முன்னர் காதலித்த இளைஞரை அதிரடியாக பிரிந்துள்ளார்.

பிரட்போர்ட் நகரை சேர்ந்தவர் அவலோன் கார்வி (17). இவர் ஒரு இளைஞரை காதலித்து வந்த நிலையில் டேட்டிங் இணையதளம் மூலம் டவுக் (44) என்பவர் கார்விக்கு அறிமுகமாகியுள்ளார்.

டவுக்குக்கு ஏற்கனவே இரு முறை திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த விடயத்தை அவர் கார்வியிடம் கூறியுள்ளார். தினமும் இணைதளம் மூலம் இருவரும் பேசி கொண்டிருந்த நிலையில் நெருங்கிய நட்பாகியுள்ளார்.

பின்னர் தனது தந்தை வயதுடைய நபரான டவுக்கை கார்வி காதலிக்க தொடங்கியுள்ளார்.

இதையடுத்து கார்வியை பார்க்க அமெரிக்காவிலிருந்து டவுக் பிரித்தானியா வந்துள்ளார்.

அங்கு இருவரும் உறவு கொண்டுள்ளனர். இதையடுத்து தான் முன்னர் காதலித்து வந்த இளைஞரை கார்வி அதிரடியாக பிரிந்துள்ளார்.

கார்வி கூறுகையில், டவுக்குடன் பழகிய சில நாட்களிலேயே அவர் மீது எனக்கு காதல் வந்துவிட்டது.

அவர் என்னுடன் இருக்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நான் ஏற்கனவே காதலித்த இளைஞரை பிரிந்ததில் எனக்கு வருத்தமில்லை என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்