மருத்துவர்களின் கணிப்பையும் மீறி உயிர்வாழும் பிரித்தானியக் குழந்தை

Report Print Balamanuvelan in பிரித்தானியா

மருத்துவர்களின் கணிப்பையும் மீறி 36 மணி நேரத்திற்கும் மேலாக தானாகவே சுவாசித்து வரும் பிரித்தானியக் குழந்தை ஆல்ஃபீயின் வழக்கில் புதிய திருப்பமாக நேற்று தனது தீர்ப்புதான் இந்த அசாதாரணக் குழந்தையின் வாழ்வில் இறுதி அத்தியாயம் என நீதிபதி கூறி குழந்தையை இத்தாலிக்கு எடுத்துச் செல்ல முடியாது என தீர்ப்பளித்த நிலையில் மீண்டும் மேல் முறையீடு செய்ய குழந்தையின் தந்தை முடிவு செய்துள்ளார்.

கிறிஸ்தவ அமைப்பு ஒன்று ஆல்ஃபீயின் பெற்றோருக்கு தனது ஆதரவைத் தெரிவித்துள்ளதையடுத்து, நேற்று நீதிபதி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து குழந்தையின் பெற்றோர் இன்று மேல் மூறையீடு செய்கின்றனர்.

அதைவிட ஒருபடிமேலே போய் இத்தாலிய இராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் ஒன்று ஆல்டர் ஹே சிறுவர்கள் மருத்துவமனைக்கு வெளியே ஆல்ஃபீயை இத்தாலிக்கு அழைத்துச் செல்வதற்காக தயாராக காத்திருக்கிறது.

இதற்கிடையில் ஆல்ஃபீக்கு இத்தாலியக் குடியுரிமையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்னொரு பக்கம் ஆல்ஃபீயின் வழக்கில் ராணியார் தலையிடும்படி கோரி 164,000பேர் கையெழுத்திட்ட மனு ஒன்று அவருக்கு அனுப்ப்ப்பட உள்ளது.

ஆரம்பத்தில் ஆல்ஃபீக்கு உணவளிக்கக்கூட மருத்துவர்கள் மறுத்ததாக ஆல்ஃபீயின் தந்தையான டாம் இவான்ஸ் தெரிவித்திருந்தார்.

விலங்குகள் கூட இவ்வளவு மோசமாக நடத்தப்பட்டிருக்காது என்றும் அவர் கூறினார்.

போப் ஆண்டவர் ஆல்ஃபீக்கு தனது ஆதரவை வெளிப்படையாக அளித்து யார் இறக்க வேண்டும் என்பதை கடவுள் மட்டும்தான் முடிவு செய்ய முடியும் என்று கூறியதைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளிலுமிருந்து அவனுக்கு ஆதரவு பெருகத் தொடங்கியுள்ளது.

போலந்து நாட்டின் அதிபரான Andrzej Duda, ஆல்ஃபீக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில் ஆல்ஃபீ காப்பாற்றப்பட வேண்டும், அவனது தைரியமான சின்ன உடல் வாழ்வென்னும் அற்புதம் சாவை விட வலிமையானது என்பதை மீண்டும் நிரூபித்துக் காட்டியுள்ளது, ஆல்ஃபீ நாங்கள் உனக்காகவும் நீ குணம்பெறவேண்டும் என்பதற்காகவும் பிரார்த்தனை செய்கிறோம் என்று ட்விட்டரில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers