நான் எரிகிறேன்... என்னை காப்பாற்றுங்கள் என கதறிய இளம்பெண்: லண்டனில் அதிர்ச்சி சம்பவம்

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
2400Shares
2400Shares
ibctamil.com

லண்டனில் Brixton பகுதியில் 18 வயது இளம்பெண் மீது ஆசிட் ஸ்பிரே அடித்துவிட்டு தப்பியோடிய நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

18 வயது பெண் பேருந்தில் பயணித்த போது அவர் மீது நபர் ஒருவர் ஆசிட் ஸ்பிரே அடித்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இதில் நிலைகுலைந்த அப்பெண், பேருந்தில் இருந்து இறங்கி தடுமாறியபடி சென்று Reliance Arcade கடையின் வாசலில் விழுந்துள்ளார்.

ஆசிட் எரிச்சலால் துடித்த இப்பெண், என்னை காப்பாற்றுங்கள், நான் எரிகிறேன் என கெஞ்சியுள்ளார். இதனால் அங்கு கூட்டம் கூடியது. அங்கிருந்த நபர் இப்பெண்ணுக்கு, குளிர்ச்சியான தண்ணீரை கொடுத்துள்ளார்.

கீழே விழுந்தவாறே தண்ணீரை தனது வாய்க்குள் ஊற்றி தன்னைத்தானே சமாதானம் செய்துகொண்டார். மேலும், நபர் ஒருவர் எனது முகம் மற்றும் வாய்க்குள் ஆசிட் ஸ்பிரேவை அடித்துவிட்டார் என அங்கிருந்தவர்களிடம் கூறியுள்ளார்.

இதனைத்தொடர்ந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அப்பெண் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த குற்றசெயலில் ஈடுபட்ட நபர் குறித்து தெரியவரவில்லை. மேலும் கடையில் இருந்த மற்றொரு பெண் கூறியதாவது, பேருந்துக்குள் வைத்து இப்பெண்ணுக்கும், குறித்த நபருக்கும் சண்டை ஏற்பட்டிருக்க வேண்டும். இதன் காரணத்தினாலேயே இவ்வாறு நடந்துள்ளது என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்