பிரித்தானியா இளவரசர் திருமணத்திற்கு அழைக்கப்பட்ட 13 வயது சிறுமி: யார் அந்த அதிர்ஷ்டசாலி?

Report Print Santhan in பிரித்தானியா
1269Shares
1269Shares
ibctamil.com

பிரித்தானியா இளவரசர் திருமணத்திற்கு 13 வயது சிறுமி அழைக்கப்பட்டுள்ளதால், அந்த சிறுமி எல்லையற்ற மகிழ்ச்சியில் உள்ளாராம்.

பிரித்தானியா இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணம் வரும் 19-ஆம் திகதி Windsor Castle-ல் உள்ள St George’s Chapel தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.

இவர்களின் திருமணத்திற்கு வரும் முக்கிய பிரபலபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் ஏற்கனவே கொடுக்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் 13-வயது சிறுமியை மெர்க்கல் திருமணத்திற்கு அழைத்துள்ளார்.

கடந்த ஆண்டு நிச்சயதார்த்தம் முடிந்தவுடன் ஹரி- மெர்க்கல் ஜோடி Nottingham Academy-க்கு சென்றுள்ளனர்.

அப்போது Leonora Ncomanzi என்ற 13 வயது சிறுமியை சந்தித்த மெர்க்கல் அவரை திருமணத்திற்கு அழைக்கிறேன் என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அந்த சிறுமி மற்றும் பள்ளியின் துணை முதல்வர் என இரண்டு பேருக்கு கெங்ஸ்டன் அரண்மனை திருமண அழைப்பிதழை அனுப்பியுள்ளது.

இது குறித்து மாணவி கூறுகையில், இதை நினைக்கும் போது என்னால் பேச முடியவில்லை, மிகவும் ஆவலோடு இருக்கிறேன், இதைப் பற்றி என் அம்மாவிடம் கூறிய போது அவர்கள் 5 நிமிடம் சந்தோஷத்தில் என்ன சொல்வதென்றே தெரியாமல் நின்றனர்.

மெர்க்கல் தான் என்னுடைய ரோல்மாடல், அவரிடம் முதல் முறையாக பேசிய அனுபவம் மிகவும் சிறப்பாக இருந்தது, நிறைய ஆலோசனைகளையும் வழங்கினார் என மகிழ்ச்சி பொங்க கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்