கடத்திச் செல்லப்பட்டுள்ள பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள்: 2,00,000 டொலர் கேட்டு மிரட்டல்

Report Print Santhan in பிரித்தானியா
166Shares
166Shares
ibctamil.com

கான்கோவில் கடத்தப்பட்ட இரண்டு பிரித்தானியா சுற்றுலா பயணிகளை விடுவிக்க வேண்டும் என்றால் இரண்டு லட்சம் டொலர் கேட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான Congo-வில் உள்ள Virunga சர்வதேச பூங்காவிற்கு இரண்டு பிரித்தானியா சுற்றுலாப் பயணிகள் பெண் வனத்துறை பாதுகாப்பு அதிகாரியுடன் சென்றுள்ளனர்.

மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கி முனையில் மிரட்டிய மர்ம நபர் பாதுகாப்பு அதிகாரி மற்றும் இரண்டு பிரித்தானியா சுற்றுலாப் பயணிகளை கடத்தி சென்றுள்ளார்.

அதுமட்டுமின்றி காரையும் கடத்திச் சென்றுள்ளனர். அதன் பின் உடன் சென்ற பாதுகாப்பு அதிகாரியை கடத்திச் சென்ற நபர்கள் கொலை செய்துவிட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் கொலை செய்யப்பட்ட பெண் பாதுகாப்பு அதிகாரியின் பெயர் Rachel Katumwa(27) எனவும் இவர் கடத்தல் காரர்களிடமிருந்து சுற்றுலாப் பயணிகளை காப்பாற்ற முற்பட்ட போது கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடத்தி செல்லப்பட்ட பிரித்தானியார்களின் பெயர் போன்ற தகவல்கள் தெரியவில்லை எனவும், ஆனால் அவர்களை விடுவிக்க வேண்டும் என்றால் கடத்தல்காரர்கள் 200,000 டொலர் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது MaiMai மிலிட்டரி படையைச் சேர்ந்தவர்கள் எனவும், காங்கோ மற்றும் Rawandan படைகளுக்கிடையே நடந்த போரின் போது உருவாகிய படை தான் இந்த படை என்று கூறப்படுகிறது.

கட்டத்தப்பட்டிருப்பவர்கள் கான்கோ இராணுவ தளத்திலிருந்து மிகக் குறைவான தொலைவிலே இருப்பதாகவும், ஆனால் அவர்களிடமிருந்து பதில் மிகத் தாமதமாக வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து உள்ளூர் அரசியல்வாதியான Zubaya Faustin கூறுகையில், கடந்த பத்து வருடங்களில் இந்த பூங்காவில் வேலை பார்த்த பாதுகாப்பு அதிகாரிகள் 175 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த வேலை மிகவும் அபாயகரமான வேலை, இருப்பினும் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இது போன்ற ஆபத்தான முடிவை எடுத்து பாதுகாப்பு அதிகாரிகளை நியமிப்பதாகவும் கூறியுள்ளார்.

MaiMai படையைச் சேர்ந்தவர்கள் அங்கு சுற்றுலாப் பயணிகளை தொடர்ந்து கடத்தி, இது போன்று தொடர்ந்து கொண்டு தான் வருகிறார்கள். இப்படி அபாயமான இடத்திற்கு சுற்றுலாப் பயணிகள் போவதற்கு முக்கிய காரணம் அங்கிருக்கும் மலைகள் மற்றும் கொரில்லாவை பார்ப்பதற்கு என்று கூறப்படுகிறது.

மேலும் பிரித்தானியா தூதரக அதிகாரி அந்நாட்டு அரசை தொடர்பு கொண்டு தான் இருப்பதாகவும், கடத்திச் செல்லப்பட்ட பிரித்தானியா சுற்றுலாப் பயணிகளின் நிலையை தொடர்ந்து கேட்டு கொண்டு இருப்பதாகவும், அவர்கள் குடும்பத்திற்கு தங்களுடைய ஆதரவு இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்