பிரித்தானியா இளவரசர் திருமணத்தை பார்க்க போறீங்களா? இந்த வாய்ப்பை தவறவிட்ராதீங்க

Report Print Santhan in பிரித்தானியா
564Shares
564Shares
ibctamil.com

பிரித்தானியா இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு செல்வர்களுக்காக பிரித்தானியா இரயில்வே நிறுவனம் சிறப்பு ஏற்பாடு செய்துள்ளதால், பொதுமக்கள் அதை பயன்படுத்தி கொள்ளும் படி கூறப்பட்டுள்ளது.

பிரித்தானியா இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணம் வரும் 19-ஆம் திகதி Windsor Castle-ல் உள்ள St George’s Chapel தேவாலயத்தில் நடைபெறவுள்ளது.

இவர்களின் திருமணத்திற்கு சுமார் 1,00,000-க்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பிரித்தானியா இரயில்வே நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிரித்தானியா இளவரசர் திருமணத்திற்கு செல்பவகள் இதை பயன்படுத்தி கொள்ளும் படி தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், வரும் வெள்ளிக்கிழமை முதல் Preston-லிருந்து Windsor-க்கு செல்லும் இரயில் அதிகாலை உள்ளூர் நேரப்படி 04.15 மணிக்கும், Stafford-லிருந்து 05.25 மணிக்கும், Solihull-லிருந்து 06.24 மணிக்கும் Leamington Spa-விலிருந்து 06.38 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணங்கள் அனைத்தும் காலை 8 மணி அல்லது 9 மணிக்குள் Windsor-க்கு சென்றுவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து வெஸ்டர் இரயில்வே நிர்வாக இயக்குனர் Mark Hopwood கூறுகையில், ஆண்டு தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முக்கிய திருவிழாக்களின் போது இரயிலில் பயணிக்கின்றனர்.

இது ஒரு மிகப்பெரிய நாள் மற்றும் முக்கியமான விழா என்பதால் அன்றைய தினத்தின் போது எங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறந்த நாளை கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்