கொலைக்களமாகும் லண்டன்: வெளியான பரபரப்பு ஆய்வு முடிவுகள்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
925Shares
925Shares
ibctamil.com

பிரித்தானிய தலைநகர் லண்டனில் சமீப காலமாக அதிகரித்துவரும் குற்றச்செயல்கள் தொடர்பில் அதிரவைக்கும் ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

தலைநகர் லண்டனில் ஆண்டு பிறந்து இதுவரை 62 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் 39 பேர் வாள்வெட்டுக்கு பலியாகியுள்ளனர்.

குறித்த சம்பவமானது மேயர் சாதிக் கான் மீது அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் அவர் மேற்கொள்ளும் நடவடிக்கையில் பொதுமக்களுக்கு சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.

ஆனால் பாதுகாப்பு நடவடிக்கைகளில் எவ்வித குறைபாடும் காணவில்லை எனவும், குற்றச்செயல்களை தடுப்பதில் பெருநகர பொலிசார் துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும் சாதிக் கான் தெரிவித்துள்ளார்.

இதனிடையே லண்டனில் அதிகரிக்கும் வாள்வெட்டு சம்பவங்களால் மருத்துவமனைகள் யுத்தப் பிரதேசமாக காட்சி அளிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இருப்பினும், லண்டனில் சமீபத்திய தாக்குதல்களின் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் அமெரிக்காவின் மிகப்பெரிய 50 நகரங்களில் அரங்கேறும் குற்றச்செயல்களை விடவும் குறைவு என ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

இந்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் திகதி வரையான காலகட்டத்தில் லண்டனில் 100,000 பேரில் 1.8 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். இதில் 8 பேர் பயங்கரவாதத்தால் கொல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் டியாகோ நகரில் இது 2.2 என உள்ளது.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் இந்த எண்ணிக்கை 3.4 என உள்ளது. மட்டுமின்றி டெட்ராயிட், மிச்சிகன் உள்ளிட்ட நகரங்களில் குடியிருக்கும் 100,000 பொதுமக்களில் 39.7 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும், நியூ ஆர்லியன்ஸ், லூசியானா உள்ளிட்ட நகரங்களில் இந்த எண்ணிக்கை 40.4 என உள்ளது. பால்டிமோர், மேரிலாண்ட் பகுதிகளில் இது 55.8 என உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்