இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்த பிரித்தானிய மகாராணி

Report Print Deepthi Deepthi in பிரித்தானியா
181Shares
181Shares
lankasrimarket.com

பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணத்திற்கு பிரித்தானிய மகாராணி எலிசபெத் சம்மதம் தெரிவித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பிரித்தானிய அரச குடும்ப சட்டத்தின்படி, அரியணை ஏறுபவர்களின் பட்டியலில் முதல் 6 இடத்துக்குள் இருப்பவர்கள் திருமணம் செய்துகொள்வதற்கு பிரித்தானிய மகாராணியின் சம்மதம் பெற வேண்டும்.

அப்படி, மகாராணியின் சம்மதம் இன்றி அந்த திருமணம் நடைபெற்றால், அவர்கள் அரியணை வரிசையில் இருந்து நீக்கப்படுவார்கள். இந்நிலையில், அரியணை ஏறுபவர்களின் வரிசையில் 6 ஆம் இடத்தில் இருக்கும் ஹரியின் திருமணத்திற்கு மகாராணி சம்மதம் தெரிவித்துள்ளார்.

பர்க்கிங்ஹாம் அரண்மனை சார்பில் இந்த சம்மத அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஹரி- மெர்க்கல் திருமணம் மே 19 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்