லண்டனில் மீண்டும் வாள்வெட்டு சம்பவம்: குற்றுயிராக மீட்கப்பட்ட இளைஞர்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
263Shares
263Shares
ibctamil.com

லண்டனின் பரபரப்பான South Bank பகுதியில் அமைந்துள்ள ராயல் நேஷனல் தியேட்டர் அருகே வாள்வெட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராயல் நேஷனல் தியேட்டர் அருகே குற்றுயிராக கிடந்த நபரை பொலிசார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மாலை 4 மணி அளவில் பொலிசாருக்கு வந்த தொலைபேசி அழைப்பில் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார், உடனடியாக லண்டன் வான் ஆம்புலன்ஸ் சேவைக்கும் தகவல் அளித்துள்ளனர்.

20 வயது மதிக்கத்தக்க அந்த இளைஞர் குற்றுயிரான நிலையில் சம்பவ பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

ஆனால் உயிருக்கு ஆபத்தில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. குறித்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும்,

ஆனால் தீவிர விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. லண்டனில் சமீப காலமாக வாள்வெட்டு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இந்த ஆண்டில் மட்டும் 62 இளைஞர்கள் குறித்த சம்பவங்களால் கொல்லப்பட்டுள்ளனர்.

பொலிஸ் தரப்பு இதுவரை முக்கிய குற்றவாளிகள் எவரையும் கைது செய்யவில்லை என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டு.

ஆனால் அதிகரிக்கும் குற்றவியல் சம்பவங்களுக்கு உரிய காரணத்தை இதுவரை லண்டன் மேயரால் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்