இலங்கையில் உயிரிழந்த பிரித்தானிய ரக்பி விளையாட்டு வீரர்: மற்றொருவர் நிலைமையும் கவலைக்கிடம்

Report Print Balamanuvelan in பிரித்தானியா
80Shares
80Shares
ibctamil.com

இலங்கையில் ரக்பி விளையாடுவதற்காக சென்ற இரண்டு பிரித்தானிய விளையாட்டு வீரர்கள் கொழும்புவில் உள்ள நைட் கிளப் ஒன்றிற்கு சென்றுவிட்டு திரும்பியபோது இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து ஒருவர் உயிரிழந்தார்.

Durham நகரிலுள்ள Clems Pirates என்னும் ரக்பி அணியைச் சேர்ந்த இரு வீரர்கள் கொழும்புவில் Ceylonese Rugby and Football Clubஉடன் விளையாடச் சென்ற நிலையில் விளையாட்டுக்குப் பின் நைட் கிளப் ஒன்றிற்கு சென்றுள்ளனர்.

மறு நாள் காலை தங்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பிய அவர்கள் இருவருக்கும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

இருவரும் உடனடியாக மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் இரண்டு மணி நேரத்திற்குப் பின் உயிரிழந்தார், மற்றொருவர் அபாயகரமான நிலையில் உள்ளார்.

மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இலங்கை அணியின் தலைவர் விடயத்தைக் கவனித்து வருவதாகவும் ஆனால் உறுதியாக விளையாட்டின்போது அவர்களுக்கு எதுவும் நேரிட வில்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்