இளவரசர் ஹரியின் திருமணத்தில் மீண்டும் ஒரு சிக்கல்: மேகனின் தந்தைதான் காரணம்?

Report Print Balamanuvelan in பிரித்தானியா
813Shares
813Shares
ibctamil.com

இளவரசர் ஹரியின் வருங்கால மனைவியின் தந்தை தாமஸ் மெர்க்கலுக்கு கடந்த வாரம் மாரடைப்பு ஏற்பட்டதால் அவரது திருமணத்தில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் உண்மையான காரணம் வேறு என்று கூறப்படுகிறது.

மேகன் மெர்க்கலின் திருமண பேச்சு ஆரம்பித்ததிலிருந்தே அவரது குடும்பத்திலிருந்து பல எதிர்ப்புகள் வரத் தொடங்கிய நிலையில், அவரது தந்தை திருமணத்தின்போது மேகனை கைப்பிடித்து அழைத்து வருவார் என்று கூறப்பட்டது.

மேகனின் தந்தையான தாமஸ் மெர்க்கல் திருமணத்திற்கு ஆயத்தமாவது போலவும், சூட் தைப்பதற்கு ஆர்டர் கொடுப்பது போலவும், அவரது முன்னாள் மனைவிக்கு பூப்க்கொத்து வாங்குவது போலவும் பல புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகின.

இந்நிலையில் தாமஸ் தனது மகளின் திருமணத்தில் பங்கேற்க மாட்டார் என்று சமீபத்தில் வெளியான செய்திகள் கூறுகின்றன.

கடந்த வாரத்தில் தாமஸுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும் அதனால் அவரால் திருமணத்தில் பங்கேற்க இயலாது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால் உண்மைக் காரணம் அதுவல்ல என்றும் சமீபத்தில் வெளியான தாமஸின் புகைப்படங்களால் உருவான பிரச்சனைதான் இதற்கு காரணம் என்றும் சில செய்திகள் கூறுகின்றன.

அதாவது தாமஸே புகைப்படக்காரர்களை ஏற்பாடு செய்து புகைப்படங்கள் வெளிவர ஏற்பாடு செய்தார் என்றும் இதற்காக அவர் பணம் பெற்றுக் கொண்டார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தற்போது மெர்க்கலின் சகோதரி தாங்கள்தான் புகைப்படக்காரர்களை ஏற்பாடு செய்ததாக ஒப்புக்கொண்ட நிலையில் தாமஸ் அதற்காக பணம் பெற்றுக்கொண்டதை மட்டும் மறுத்துள்ளார்.

இதனால் ராஜ குடும்பத்தில் மெர்க்கலுக்கு ஏற்பட்டுள்ள தர்மசங்கடமான சூழலை தவிர்ப்பதற்காகவே தாமஸ் திருமணத்தில் பங்கேற்க போவதில்லை என்னும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்