திருமண நிகழ்வில் இளவரசர் ஹரியிடம் இளவரசர் வில்லியம் அளித்த புகார்: வைரலாகும் வீடியோ

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரி திருமணத்தில் அவருடன் இருந்த சகோதரர் வில்லியம் தனது கால்சட்டை மிகவும் இறுக்கமாக இருந்ததாக ஹரியிடம் புகார் கூறியுள்ளார்.

ஹரி - மேகன் மெர்க்கல் திருமணம் இரு தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக நடைபெற்றது.

இதில் ஹரியின் மாப்பிள்ளை தோழனாக அவரின் அண்ணன் இளவரசர் வில்லியம் உடனிருந்தார்.

திருமண நிகழ்வுக்கு முன்னர் இருவரும் ராணுவ சீருடையில் காரிலிருந்து இறங்கி நடந்து வந்தார்கள்.

அப்போது வில்லியம் சங்கடமாக உணர்ந்தார்.

இதற்கு காரணம் அவர் அணிந்திருந்த கால்சட்டை மிகவும் இறுக்கமாக இருந்தது தான்.

இதையடுத்து அருகிலிருந்த ஹரியிடம், என் கால்சட்டை மிகவும் இறுக்கமாக உள்ளது என வில்லியம் புகார் கூறினார்.

இருவரும் அணிந்திருந்த உடையானது Dege & Skinner என்ற பிரபல நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers