இளவரசர் ஹரி திருமணத்தில் தேவதையாக ஜொலித்த முன்னாள் காதலி

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமணத்தில் கலந்து கொண்ட அவரின் முன்னாள் காதலி செல்சி தவி அழகான உடையில் ஜொலித்தார்.

ஹரி - மேகன் மெர்க்கல் திருமணம் இரு தினங்களுக்கு முன்னர் கோலாகலமாக நடைபெற்றது.

இத்திருமணத்தில் பல முக்கியமான நபர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

ஹரி தனது திருமணத்தில் கலந்து கொள்ள தனது முன்னாள் காதலியான செல்சி தவிக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் நீல நிற ஆடையில் அழகு பதுமையாக செல்சி திருமணத்தில் கலந்து கொண்டார்.

ஹரியும், செல்சியும் கடந்த 2005-ஆம் ஆண்டிலிருந்து 2010-ஆம் ஆண்டு வரை டேட்டிங் செய்து பின்னர் ஒருவரை ஒருவர் பிரிந்தனர்.

இருவரும் காதலர்களாக பிரிந்தாலும், தொடர்ந்து நல்ல நண்பர்களாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers