பிரித்தானியா இளவரசர் ஹரி திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருளை லட்சக்கணக்கில் விற்ற பெண்

Report Print Santhan in பிரித்தானியா

பிரித்தானியா இளவரசர் ஹரி திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசுப் பொருளை இளம் பெண் ஒருவர் இணையதளம் மூலம் விற்று லட்சக்கணக்கில் பணம் சம்பாதித்துள்ளார்.

பிரித்தானியா இளவரசர் ஹரி-மெர்க்கல் திருமணம் கடந்த 19-ஆம் திகதி வின்ஸ்டரில் உள்ள தேவாலயத்தில் கோலகலமாக நடைபெற்றது.

அப்போது திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்த முக்கிய விருந்தினர்களுக்கு பரிசுப் பை ஒன்று கொடுக்கப்பட்டது. அதன் உள்ளே தண்ணீர், தங்க நிறத்தால் ஆன ஹரி, மெர்க்கல் ஆகியோரின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட சாக்லெட் மற்றும் 20 சதவீதம் கேஷ் பேக் என இருந்தன.

இந்நிலையில் அரச குடும்ப திருமணத்தில் கொடுக்கப்பட்ட பரிசு பொருள் வரலாற்று சிறப்புமிக்கது என்று பலரும் எதிர்பார்க்கப்படுவதால், சிலர் அந்த பரிசுப் பையை இணையத்தில் ஏலத்திற்கு விட்டுள்ளனர்.

அப்படி ஏலத்திற்கு விட்டவர் தான் Claire Oliver(31). லண்டனைச் சேர்ந்தவரான இவர் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இளவரசர் ஹரி திருமணத்தில் அழைக்கப்பட்ட முக்கிய விருந்தினர்களில் இவரும் ஒருவர் என்று கூறப்படுகிறது.

இவர் திருமணத்தில் தனக்கு கொடுக்ப்பட்ட பரிசுப் பையை பிரபல இணையதளமான இ-பெயிலில் ஏலத்திற்கு விட்டுள்ளார். அதில் இவருடைய பரிசுபை 21,400 பவுண்ட்(45,23,338 ரூபாய் இலங்கை மதிப்பு) விலை போயுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...