இளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணத்துக்கு வந்த நெகிழ்ச்சி பரிசு: பின்னணி காரணம்

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் செயல்படும் தொண்டு நிறுவனம் ஒன்று wonderbags எனப்படும் எரிபொருளை மிச்சப்படுத்தும் சமையல் சாதனத்தை இளவரசர் ஹரி - மெர்க்கலுக்கு பரிசாக வழங்கியுள்ளது

Rotherham நகரில் இயங்கி வரும் Africa’s Gift என்னும் தொண்டு நிறுவனம் தான் இப்பரிசை வழங்கியுள்ளது.

wonderbags என்பது எரிபொருளை மிச்சப்படுத்தும் சமையல் சாதனமாகும், ஆப்பிரிக்காவில் பாதுகாப்பான சமையல் பிரச்சாரத்தை ஊக்குவிக்க ஹரியும், மெர்க்கலும் உதவவேண்டும் என்ற நோக்கில் இது பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் கென் துன் கூறுகையில், ஹரி - மெர்க்கல் திருமண நாள் எனக்கு மகிழ்ச்சியாக கழிந்தது.

திருமண பரிசான wonderbags-ஐ பக்கிங்காம் அரண்மனையில் கொடுப்பதற்காக நானே அங்கு வந்தேன்.

wonderbags குறித்து அரச தம்பதி தனிப்பட்ட ஆர்வத்தை எடுத்து கொள்வார்கள் என நம்புகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்