விமான நிலையத்தில் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட விமானங்கள்: பெரும் விபத்து தவிர்ப்பு

Report Print Raju Raju in பிரித்தானியா

பிரித்தானியாவில் உள்ள விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த இரு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

Stansted விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.15 மணிக்கு இச்சம்பவம் நடந்துள்ளது.

தற்காலிக நிறுத்துமிடத்தில் Primera நிறுவனத்தின் விமானமும், Ryanair நிறுவனத்தின் விமானமும் ஒரே நேரத்தில் புறப்பட்டன.

அப்போது Primera விமானத்தின் இறக்கை, Ryanair விமானத்தின் பின்பகுதியுடன் சொருகிகொண்டு மோதியுள்ளது.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவொரு காயமும் ஏற்படவில்லை.

இதையடுத்து இரண்டு விமானங்களும் லண்டன் ஸ்டான்ஸ்டட் விமான போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டன.

பின்னர் தொழில்நுட்ப பொறியாளர்கள் Ryanair விமானத்தை சோதனை செய்தார்கள்.

தாமதத்தை தடுக்க விமானங்களில் உள்ள பயணிகள் வேறு விமானத்தில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers