பிரித்தானியாவில் ஒரே இரவில் இருவேறு துயர சம்பவம்: அதிரவைக்கும் படத்தை வெளியிட்ட பொலிஸ்

Report Print Arbin Arbin in பிரித்தானியா
1205Shares
1205Shares
ibctamil.com

பிரித்தானியாவின் மேற்கு யார்க்ஷயர் பகுதியில் முகமூடி அணிந்த மர்ம நபர் இளைஞரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

குடியிருப்புகள் மிகுந்த Huddersfield பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதிகாலை 4.40 மணியளவில் துப்பாக்கி சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் கண்விழித்ததாக தெரிவித்துள்ளனர்.

ஆனால் குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது திட்டமிட்ட படுகொலையாக இருக்கலாம் என பொலிசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியிருந்த காட்சிகளின் புகைப்படத்தையும் பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

இதேபோன்று வடக்கு லண்டனில் உள்ள Green Lanes பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கத்தியால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சனிக்கிழமை இரவு சுமார் 9.45 மணியளவில் இந்த கொலைச்சம்பவம் நடந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

வெள்ளியன்று தென் மேற்கு லண்டனில் 16 வயது பாடசாலை மாணவன் ஒருவன் வாள்வெட்டுக்கு இரையான சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவயிடத்தில் இருந்து ஒரு துப்பாக்கியும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பில் இரு இளைஞர்களையும் ஒரு 50 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம் பிரித்தானியாவின் பிரபல கொமடியன் Michael McIntyre என்பவரிடம் இருந்து சுமார் 15,000 பவுண்ட்ஸ் மதிப்பிலான கைக்கடிகாரத்தை மர்ம நபர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்