பிரித்தானியாவில் காணாமல் போன அதிகாரியை தேடும்போது கிடைத்த உடல்

Report Print Trinity in பிரித்தானியா
203Shares
203Shares
ibctamil.com

இங்கிலாந்தின் தென்கிழக்கு பகுதியை சேர்ந்த நாடான Essex பகுதியில் உள்ள basildon எனும் இடத்தை சேர்ந்தவர் டினா கென்டெல்லா (49)அந்த பகுதியில் வீட்டிற்கு வீடு சென்று கடன் வசூலிக்கும் பணி அதிகாரியான இவர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று காணாமல் போனார்.

இதனையடுத்து வந்த புகாரின்பேரில் காவல்துறையினர் டினாவை தேடும் பணியில் ஈடுபட்டனர். பலமணி நேர தேடுதலுக்கு பின் அந்த ஊரின் ஒரு பகுதியில் டினாவின் மொபைல் போன் கண்டெடுக்கப்பட்டது.

காரிலிருந்து செல்லும்போது அந்த போன் தூக்கியெறியப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. போன் கண்டெடுத்த இடத்தை தடயவியல் நிபுணர்கள் சோதித்து வருகின்றனர்.

இதனிடையில் Langdon Hills அருகே உள்ள Derby Close எனும் இடத்தில் ஒரு பெண்ணின் பிணத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

இறந்தவர் டினா தானா என்பது இன்னமும் உறுதி செய்யப்படவில்லை. இது சம்பந்தமாக 38 வயது ஆண் ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுபற்றி essex காவல்துறையினர் கூறுகையில் இறந்து போன பெண் யார் என்பது இன்னமும் மர்மமாகவே இருப்பதாகவும், இதன் காரணமாக basildon பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறினார்.

காணாமல் போன டினா மிக அமைதியானவர் என்றும் வீட்டில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக அவர் மன அமைதிக்காக எங்காவது சென்றிருக்கலாம் என்றும் வீட்டு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்