தாயைப் போல சார்லட்! அரச குடும்பத்தின் அதிசய ஒற்றுமைகள்

Report Print Trinity in பிரித்தானியா
555Shares
555Shares
ibctamil.com

கேட் மிட்டில்டன் தனது மகள் சார்லட்டும் தானும் ஒன்றாகவே காணப்பட வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறார்.

தனது செல்ல மகளின் மீது வழக்கமான தாய்மார்கள் போலவே அரச குடும்பத்தை சேர்ந்த அவரும் தனிப் ப்ரியம் கொண்டுள்ளார்.

Duchess of Cambridge ஆன கேட் மிட்டில்டனும் அவரது இரண்டாவது மகளான குட்டி இளவரசி சார்லட்டும் எல்லா அரச குடும்ப விழாக்களிலும் ஒன்றாகவே காணப்படுகின்றனர்.

இதில் என்ன அதிசயம் என்பவர்கள் அவர்கள் இருவரையும் சரியாக பார்க்கவில்லை என்றுதான் அர்த்தம்.

காரணம் வெளியுலகுக்கு வரும்போதெல்லாம் அம்மா கேட்டும் மகள் சார்லட்டும் ஒரே நிறத்தில் உடை அணிவதை வழக்கமாகவே கடைப்பிடிக்கின்றனர்.

அவர்களை அப்படி ஒரே நிறத்தில் பார்க்கும்போது அத்தனை அழகாகவும் வசீகரமாகவும் இருக்கிறது.

நேற்று நடைபெற்ற troops of colour நிகழ்ச்சியிலும் கேட் மற்றும் சார்லெட் ஐஸ் ப்ளூ நிறத்தில் உடையணிந்திருந்தனர்.

சார்லட்டிற்க்கு ஒரு வயதானது முதலே கேட் இதே போல ஒன்றாக ஒரே நிறத்தில் உடையணிவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

மேலும் இளவரசர் ஹரி மற்றும் மேகன் திருமணத்திலும் அம்மாவும் மகளும் ஒரே நிறமான வெண்மையில் உடை அணிந்திருந்தனர்.

2016இல் நடந்த அரச விழா மற்றும் 2017ல் நடந்த கிறிஸ்துமஸ் விழாவின் போதும் இவ்விருவரின் ஒரே நிற கோட்பாடுகள் பார்ப்பவரை கொள்ளை கொண்டது.

கேட் மற்றும் சார்லட் ஆகிய இருவரின் மேலும் சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்காக.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்