பிரித்தானியா மகாராணியின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை பெண்ணிற்கு கிடைக்கவுள்ள கெளரவம்

Report Print Santhan in பிரித்தானியா
408Shares
408Shares
ibctamil.com

இலங்கையில் பிறந்து அவுஸ்திரேலியாவில் வாழ்ந்து வரும் பெண்ணிற்கு பிரித்தானிய மகாராணியின் பிறந்த்நாளை முன்னிட்டு விருது வழங்கி கெளரவுக்கப்படவுள்ளது.

பிரித்தானியா மகாராணி இரண்டாம் எலிசபத்தின் பிறந்த நாள் ஜுன் மாதம் கொண்டாடப்படுகிறது. இந்த கொண்டாட்டத்தின் போது 16 காமென்வெல்த் நாடுகள் சிலவற்றில் சிறப்பாக செயல்படும் நபர்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்படும்.

அந்த வகையில் இலங்கையில் பிறந்து 1977-ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவிற்கு சென்ற Romola Marie Sebastianpillai-க்கு இந்த விருது வழங்கப்படவுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து தெரிவிக்கையில், அவுஸ்திரேலியாவிற்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் வந்த Romola Marie Sebastianpillai இங்குள்ள தொண்டு நிறுவனங்களில் இணைந்து சிறப்பாக சேவையாற்றி வருகிறார்.

இதனால் அவரை கெளரவிக்கும் விதமாக இந்த விருது கொடுக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல் Sir Peter Cosgrove தெரிவித்துள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்