லண்டனில் பட்டப்பகலில் துணிகரம்! மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் பகுதியில் 2 இளைஞர்களை வெட்டிவிட்டு ஓடிய மர்ம நபர்

Report Print Santhan in பிரித்தானியா
830Shares
830Shares
ibctamil.com

லண்டனில் சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளியே இரண்டு இளைஞர்களை மர்ம நபர் கத்தியால் வெட்டி வீசிவிட்டு தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் Kensington அரண்மனைக்கு சில மைல் தொலைவில் உள்ள Kensington வீதியில் மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும் Waitrose சூப்பர் மார்க்கெட்டிற்கு வெளியில் சுமார் 20 வயதிற்கு மேல் உள்ள இரண்டு இளைஞர்களை மர்ம நபர் கத்தியால் வைத்து வெட்டி வீட்டு ஓடியுள்ளான்.

இதனால் இது குறித்த தகவல் பொலிசாருக்கு உள்ளூர் நேரப்படி மாலை 05.05 மணிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு ஆம்புலன்சுடன் விரைந்து வந்த பொலிசார், பாதிப்புக்குள்ளான இரண்டு பேரையும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது இது தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ள பொலிசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இரண்டு இளைஞர்களையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளோம்.

இரண்டு பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதே தவிர அவர்கள் உயிருக்கு எந்த ஒரு பயமும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை கைது செய்துள்ளோம் விசாரணைக்கு பின் முழு தகவலை தெரிவிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்