மேகன் மெர்க்கல் போலவே மாறிய இளம்பெண்: எவ்வளவு செலவு செய்தார் தெரியுமா?

Report Print Raju Raju in பிரித்தானியா
321Shares
321Shares
ibctamil.com

மேகன் மெர்க்கலின் மூக்கு மற்றும் அவரின் சிரிப்பு தனக்கும் அப்படியே இருக்க வேண்டும் என விரும்பிய இளம்பெண், கணவரின் எதிர்ப்பையும் மீறி பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை செய்துள்ளார்.

பிரித்தானியாவின் Buckinghamshire கவுண்டியை சேர்ந்தவர் டிரேசி கிஸ் (30). இவருக்கு பிரட்டி என்ற கணவரும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இளவரசர் ஹரியின் மனைவி மேகன் மெர்க்கலின் தீவிர ரசிகரான டிரேசி அவரின் மூக்கு மற்றும் சிரிப்பு தனக்கும் அப்படியே இருக்க வேண்டும் என விரும்பினார்.

அதன்படி பிளாஸ்டிக் சர்ஜரி சிகிச்சை மூலம் மூக்கை மாற்றி கொண்டுள்ளார்.

மேலும் மெர்க்கல் போலவே தனது சிரிப்பு இருக்க வேண்டும் என பற்களையும் மாற்றி கொண்டுள்ளார்.

இதற்காக டிரேசி இதுவரை £10,000 பணத்தை செலவு செய்துள்ளார்.

டிரேசி தனது மூக்கை இவ்வளவு செலவு செய்து மாற்ற முயன்றது அவர் கணவர் பிரட்டிக்கு சுத்தமாக பிடிக்காத நிலையில் இது குறித்து அவருடன் சண்டை போட்டுள்ளார்.

ஆனால் அன்பு கணவர் வெறுப்பையும் மீறி டிரேசி இவ்விடயத்தை மகிழ்ச்சியுடன் செய்துள்ளார்.

டிரேசி கூறுகையில், மெர்க்கல் திருமண நிகழ்வின் போது நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன்.

அதனால் தொலைக்காட்சி மூலம் அவர் திருமணத்தை பார்த்தேன்.

தற்போது மெர்க்கல் போலவே மூக்கும், சிரிப்பும் கொஞ்சம் எனக்கு வந்துள்ளதாக நம்புகிறேன், இதற்கான சிகிச்சையை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறேன் என கூறியுள்ளார்.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்