யாருக்கு கிடைக்கும் இந்த அதிர்ஷ்டம்? மேகனுக்கு மரியாதை செய்த மகாராணி: ஆச்சரிய வீடியோ

Report Print Balamanuvelan in பிரித்தானியா
792Shares
792Shares
lankasrimarket.com

பிரித்தானிய மகாராணியுடனான சந்திப்பு நிகழுமா என பல ராஜ குடும்பத்தவர்களே காத்திருக்க சமீபத்தில்தான் இளவரசர் ஹரியை மணந்த மேகனுக்கு அடித்திருக்கிறது அதிர்ஷ்டம்.

மகாராணியுடன் ராஜ ரயிலில் பயணித்து Cheshire சென்றதும் ரயிலிலிருந்து இறங்கிய மேகனுக்கு, ராணிக்கு கிடைத்த அதே வரவேற்பு கிடைக்கிறது.

சற்று நேரத்தில் ராணிக்கான கார் வந்து நிற்க ராணியின் பின்னால் தயங்கி நிற்கிறார் மேகன்.

அனைவரும் ஆச்சரியப்படும் விதமாக மகாராணி மேகனை அழைத்து அவரை முதலில் காரில் ஏறச் சொல்கிறார்.

மேகன் காரில் ஏறிய பின் மகாராணி காரில் ஏறும் அந்தக் காட்சி, பார்த்துக் கொண்டிருந்த ஒரு பார்வையாளரால் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு இணையத்தில் பரபரப்பாக வலம் வருகிறது.

சமீபத்தில் செய்திகள் வெளியானதுபோலவே இளவரசி கேட்டை பின்னுக்குத் தள்ளி மகாராணியின் மனதில் இடம் பிடித்து விட்டார் மேகன் என்றே எண்ணத் தோன்றுகிறது.

மேலும் பிரித்தானியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்